Breaking News
Home / செய்திகள் (page 60)

செய்திகள்

எண்ணூரில் எண்ணெய், வாயு கசிவை ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்: முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்

சென்னை: எண்ணூரில் எண்ணெய், வாயு கசிவை ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து, தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கி.கண்ணன் வலியுறுத்தியுள்ளார். எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில், எண்ணூரில் ஏற்பட்டு வரும் எண்ணெய் கசிவு மற்றும் வாயுக் கசிவு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், முன்னாள் நீதிபதி கி.கண்ணன் தலைமையில் எண்ணூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பேசியதாவது: …

Read More »

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை பொறியாளரின் நகை, சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை முதன்மை பொறியாளரின் ரூ.4.71 கோடி மதிப்பிலான சொத்துகள், நகைகளை அமலாக்கத் துறை முடக்கியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டலத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிகளவு லஞ்சம் கேட்பதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு …

Read More »

சென்னையில் ஜன. 7, 8-ல் உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: சென்னையில் ஜனவரி 7, 8 -ம் தேதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இணையும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி …

Read More »

‘நான் பொறுப்பில் இருந்தால் அமைச்சர் உள்பட அனைவரையும் உள்ளே வைத்துவிடுவேன்!’ – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்!

சென்னை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மாஜி அமைச்சர்கள் இடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்று அக்கட்சி வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த வாரம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 13 தீர்மானங்களில் ஆளும் திமுகவிற்கு எதிராக கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது போக அனைத்திந்திய அண்ணா …

Read More »

புதிய கருப்பு வண்ணத்தில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள்.. புத்தாண்டில் புதிய மாற்றம்

சென்னை: 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இன்று முதல் புதிய கருப்பு வண்ணத்தில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் மாறி உள்ளது. 6 புதிய கருப்பு இன்னோவா கார்களை அரசு வாங்கி உள்ளது. தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கமாண்டோ பாதுகாப்பும் வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கமாக …

Read More »

சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் ‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டு’ கொண்டாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை: இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள், 16 துணை கமிஷனர்கள் என 18 ஆயிரம் போலீசார் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை பணியில் ஈடுபட்டனர். …

Read More »

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கிய தமிழக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

சென்னை: “புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, …

Read More »

“திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு இது…” – தொழிற்சங்க விவகாரத்தில் ஓபிஎஸ் சாடல்

சென்னை: ‘போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் பயனடையும் வண்ணம் மீண்டும் நடைமுறைப் படுத்தப்படும்” என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை எண் 152-ல் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், …

Read More »

மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: முது நிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணி முறையை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர், மருத்துவர்களுக்கான பணி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் …

Read More »

அமோனியா கசிவு | அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் இருப்பது யார்?- அன்புமணி சரமாரி கேள்வி

சென்னை: எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்திய உர ஆலை, எந்த துணிச்சலில் பொய்யான தகவல்களை பரப்பியது? ஆலைக்கு அந்த அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்றும் அன்புமணி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னையை அடுத்த எண்ணூரில் அமோனியா …

Read More »