சென்னை: அஸ்திவார பணியால் ஏற்படும் அதிக சத்தத்தால் சுற்றுப்புற மக்கள்பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது: சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக10 மாடி மருத்துவமனையை கட்டிவருகிறது. இந்த கட்டுமான பணியில், ஆழ்குழாய் மூலமாக …
Read More »முதல்வர் தலைமையில் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது: அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: முதலமைச்சர் தலைமையில் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் படி, கூட்டுறவுத்துறை தனக்கென்று சில திட்டங்களை வகுத்து, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்களுடைய பணிகள் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் …
Read More »நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும்: பிரேமலதா விஜயகாந்திடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பலர் பிரேமலதா விஜயகாந்திடம் முறையீடு செய்துள்ளனர். மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்று …
Read More »மோசடி நிதி நிறுவனங்களிடம் மக்கள் தொடர்ந்து ஏமாறுவது ஏன்? அறிவுறுத்தல் வழங்கிய சென்னை HC
சென்னை : நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக சென்னையை சேர்ந்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். …
Read More »“தேவநேயப் பாவாணரைப் போற்றி தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்போம்” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “தேவநேயப் பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்” என தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். …
Read More »மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டு சட்டத்தில் அரசு திருத்தம் செய்ய வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், …
Read More »“சாதனைப் பயணம்; ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: “ஸ்பெயின் நாட்டுக்கு தான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது. ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்பெயினில் இருந்து இன்று (பிப்.7) காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது பயணத்தைப் பற்றி விவரித்தார். இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “ உங்கள் வாழ்த்துகளை …
Read More »அதிமுக உள்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தசூரியமூர்த்தி, கடந்த 2021-ம்ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு,உள்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சி விதிகளின்படி அனைத்து அடிப்படைஉறுப்பினர்களும் வாக்களித்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், உள்கட்சி தேர்தலை கட்டாயம் நடத்த …
Read More »மாநில நிதி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்து வழக்கு: கேரளாவின் நடவடிக்கைக்கு தமிழக அரசு முழு ஆதரவு
சென்னை: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதில் கேரளாவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றுஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான, …
Read More »மக்களவை தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை
சென்னை: மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல், வருமான வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மாநில வாரியாக ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் …
Read More »