Breaking News
Home / செய்திகள் (page 22)

செய்திகள்

எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஆர்.பி. உதயகுமார் : சட்டசபையில் ஒ.பி.எஸ் இருக்கை மாற்றம்

சென்னை: அ.தி.மு.க – துணை எதிர்கட்சி தலைவராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , சட்டப்பேரவையில் , அவரின் இருக்கை 206-ல் இருந்து 207-ஆக மாற்றப்பட்டுள்ளது. புதிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு 206 இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஒ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பதவியில் இருந்து வந்தனர். அதேபோல் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாராக எடப்பாடி பழனிச்சாமி …

Read More »

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை திரும்ப தூதரகம் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை வழக்கில் ஆயுள் தண்டனைகைதிகளாக இருந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன், சாந்தன், …

Read More »

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம் விவகாரம்; போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் – அமலாக்கத்துறை விளக்கம்

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இயங்கிவந்த பின்னி மில் வளாகத்தில் உள்ள 14.16 ஏக்கர் நிலம்கடந்த 2015-ம் ஆண்டு விற்கப்பட்டது. இந்த நிலத்தை சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் …

Read More »

டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம்

சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பிரிவு பொறுப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவில் 30 போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குசாவடிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தோடு இணைந்து கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பணிக்காக …

Read More »

தமிழகத்தில் ரூ.19,100 கோடி மதிப்பில் புதிதாக 13 குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தமிழகத்தில் ரூ.19,110 கோடி மதிப்பில், புதிதாக 13 குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்: ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): 2006-ல் நிறைவேற்றப்பட்ட சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் கிள்ளியூர் தொகுதி வழியாக கன்னியாகுமரிக்கு செல்கிறது. இந்தக் குழாய் பழுதடைந்து உடைந்துள்ளதால், விபத்துகள் நேரிடுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு: …

Read More »

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் இன்று தீர்மானம்

சென்னை: ‘ஒரே நாள் ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட 2 அரசினர் தனித் தீர்மானங்கள் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்படுகின்றன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வலியுறுத்தியும் இரண்டு …

Read More »

வானியல் ஆய்வுக்கான `எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் நியூட்ரான் நட்சத்திரம் தொடர்பான தரவுகள் சேகரிப்பு

சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் கிராப் பல்சர் எனும், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜன. 1-ம் தேதி பூமியில் இருந்து 650 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் …

Read More »

செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி, 243 நாட்களாக நீதிமன்ற காவலில் இருந்துகொண்டு இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது …

Read More »

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான இபிஎஸ் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் உட்கார்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக எதிர்க்கட்சித் துணை தலைவராக …

Read More »

சென்னையில் தரையிறங்க தயங்கும் சர்வதேச விமானங்கள்: பரந்தூர் விமான நிலைய பணியை விரைந்து தொடங்க நிபுணர்கள் கோரிக்கை

சென்னை : சென்னை விமான நிலையத்தில் தங்கள் விமானங்களை தரையிறக்க தயங்கும் சர்வதேச விமான சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இந்த பிரச்சைக்கும் உடனே தீர்வு காண வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் பரந்தூர் விமான நிலைய பணிகளை தொடங்குவது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் பரிந்துரைக்கின்றனர். தமிழ்நாட்டின் அடையாளங்களின் ஒன்றாகவும், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதுமான சென்னை …

Read More »