Breaking News
Home / செய்திகள் (page 21)

செய்திகள்

ரூ.2,000 கோடி செலவில் கிராமப்புறங்களில் வீடுகள் பழுதுபார்க்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001-க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Read More »

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இது …

Read More »

“காவிரி – குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் (தொகை) வசூலிக்காமல் இருப்பதற்கும், காவிரி – குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கும், கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கும், நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டிருக்கும் …

Read More »

“உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்” -மூடப்படுகிறது சென்னையின் அடையாளம்!

சென்னையின் மிக பிரபலமான உதயம் சினிமா தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்’ என இசையமைப்பாளர் தேவா ஒரு திரைப்படத்தில் பாடலே பாடியிருப்பார். அந்த உதயம் தியேட்டர் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது மூடுவிழா கண்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல திரையரங்குகள் மூடப்பட்டு திருமண மண்டபங்கள் ஆகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் …

Read More »

சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர்..!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை அவ்வப்போது நடத்தி வருகிறது. அதிமுக, பாஜக இன்னும் தனது கூட்டணி குறித்து உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு தமிழக முழுதும் …

Read More »

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு பிப்.29-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வரும் பிப்.29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, வீட்டு வசதித்துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக். 20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த, 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் இம்மாதம் …

Read More »

பிப்.24-ல் ஜெயலலிதா பிறந்தநாள் விழா | தமிழகம் முழுவதும் அதிமுக 5 நாள் பொதுக்கூட்டம்: சேலம் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்பு

சென்னை: அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பிப்.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சேலத்தில் 25-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, பிப்.24-ம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிப்.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு …

Read More »

“அப்போது ஆதரவு.. இப்போது எதிர்ப்பு..” குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து தனது நிலைப்பாட்டை மாற்றிய பாமக!!

சென்னை : நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது,'”நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தாலும், மக்கள் நலனிற்காக இச்சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படக் கூடாது என பாமக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனை நல்லதாக இருந்தாலும், அதை முழுமையாகச் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்” இவ்வாறு தெரிவித்தார்.

Read More »

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வாபஸ்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து அமைச்சர். ஏ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து நேற்று மனிதவளம் மற்றும் மேலாண்மைத்துறை …

Read More »

பிப்.16-ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் அழைப்பு: தமிழக காங்கிரஸ் ஆதரவு

சென்னை: பாரத் பந்த் வெற்றிகரமாக தமிழகத்தில் நடக்க அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் சாகுபடிக்கான அடக்க விலையோடு 50 சதவீதம் கூடுதலாக …

Read More »