சென்னை : நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது,'”நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தாலும், மக்கள் நலனிற்காக இச்சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படக் கூடாது என பாமக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனை நல்லதாக இருந்தாலும், அதை முழுமையாகச் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்” இவ்வாறு தெரிவித்தார்.