Breaking News
Home / செய்திகள் (page 126)

செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமானவரித் துறை சோதனை

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அப்போது, வங்கி லாக்கரில் தொழில் முதலீடு ஆவணங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் …

Read More »

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் அக்.22, 29 தேதிகளில் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மனுக்களை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு, …

Read More »

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்க துறையினரால் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நவ.20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற …

Read More »

டிச.16-க்கு பிறகு வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை டிச.16-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து ஆணையர் பேசியதாவது: வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு …

Read More »

மாலத்தீவு கடலோர காவல்படை கைது செய்த தமிழக மீனவர், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகையையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், ‘ஹோலி ஸ்பிரிட்’ என்ற படகில் கடந்த அக்.22-ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது, மாலத்தீவு …

Read More »

மருத்துவக் காப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களால் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது: ஐஎம்ஏ

சென்னை: மருத்துவக் காப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களால் நோயாளிகள் விரும்பிய மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய அமைப்பு ஆகும். தமிழகத்தில் 50 ஆயிரம் பேரும், நாடு முழுவதும் 4 லட்சம் மருத்துவர்களும் …

Read More »

‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கிலோ மீட்டர் சுகாதார நடைபாதையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் உள்ள முத்துலட்சுமி பூங்கா அருகே தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, …

Read More »

ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி!: கி.வீரமணி விமர்சனம்

சென்னை: ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி என கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சூரத்திலிருந்து சஞ்சய் ஈழ வா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.அவருக்குக் கிடைத்த பதில்மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் உலகின் ஜனநாயகவாதிகள் அனைவரையுமே அதிர்ச்சியூட்டுபவையாக …

Read More »

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு செப்டம்பரில் சென்னையில் பயணிகள் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து சமீப காலமாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 3,129 சர்வதேச விமானங்கள், 8,962 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 104 சர்வதேச விமானங்களும், 299 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல …

Read More »

நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கொட்டும் மழையில், ‘நடப்போம்; நலம்பெறுவோம்’ எனும் நோக்கில் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி நடைபாதையை சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர். சென்னை பெசன்ட் நகரில்டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் தொடங்கி, பெசன்ட் நகர் அவென்யூ …

Read More »