Breaking News
Home / செய்திகள் (page 67)

செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில், ’99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு , நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட …

Read More »

“குற்றவியல் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம்” – வேங்கைவயல் சம்பவத்தில் அன்புமணி கருத்து

சென்னை: ஓராண்டாகியும் வேங்கைவயல் கொடூரத்துக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு …

Read More »

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், பொருட்களுடன் ஜனவரி 2-வது வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 2-வது வாரம் முதல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது …

Read More »

ஒடிசா முன்னாள் ஆளுநர் ராஜேந்திரனுக்கு போலீஸ் மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஒடிசா முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலருமான மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியவரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருந்தினேன். கடந்த, 1957-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் …

Read More »

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்

சென்னை: சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மிகப் பிரபலமான ரயிலாக வந்தே பாரத் ரயில் இருக்கிறது. நவீன வசதிகளுடன் அதிவேகத்தில் இயங்கும் இந்த ரயில் சென்னை ஐசிஎஃப் ஆலையில் முதன்முறையாக 2018-ம் ஆண்டில்தயாரிக்கப்பட்டது. இதுவரை 49 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கு மேற்பட்டவை நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இவற்றில், தெற்கு …

Read More »

அதிமுக பொதுக்குழு இன்று வானகரத்தில் கூடுகிறது: தேர்தல், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட இரட்டை தலைமைசெயல்பட்டு வந்தது. கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், இருதரப்பினர் இடையே நீண்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. …

Read More »

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்: முத்தரசன் பங்கேற்பு

சென்னை: எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவு விவகாரத்தில் சிபிசிஎல் நிறுவனம் முழு பொறுப்பேற்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைபோராட்டம் சென்னை மணலியில்நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலை வகித்தார். …

Read More »

ஆயிரம்விளக்கு செயல்வீரர் கூட்டம் பாஜக உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துமாறு செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளில், அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடத்தி தேர்தல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, சென்னை ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை தொகுதியின் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் தியாகராய நகர் தெற்கு உஸ்மான் …

Read More »

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம்: ஸ்டாலினிடம் குன்றக்குடி ஆதீனம் வழங்கினார்

சென்னை: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, முகாம் அலுவலகத்தில் நேற்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்தார். அப்போது, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின்போது, …

Read More »

மழையால் சாலைகளில் ஏற்பட்ட 4 ஆயிரம் பள்ளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-வது வார்டு, அன்னை சத்யா நகரில் நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தம் பணிதொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த …

Read More »