Breaking News
Home / செய்திகள் (page 122)

செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு தீபாவளி பரிசு.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கில் இன்று முதல் ரூ. 1000 டெபாசிட்!!

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் திட்ட பயனாளிகளின் ரூ.1000 ஐ வரவு வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெண்கள் கடந்த இரண்டு மாதமாக தலா ரூ.1000 பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்து, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், நியாயமான காரணம் இருந்தால் …

Read More »

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக அரசு செலவில் கட்டித் தரப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னர் தாம்பரம் வட்டத்திலும் பிறகு, தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பிரித்து இரண்டு மாவட்டங்களாக …

Read More »

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு: 9,000 பேருக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் 9,776 பட்டதாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14-வதுபட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் சோ.ஆறுமுகம் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார். பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த 485 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி …

Read More »

கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது

சென்னை: கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் …

Read More »

தீபாவளி | தமிழகம் முழுவதும் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள்

சென்னை: “தீபாவளி தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை …

Read More »

Mr.அண்ணாமலை! ஶ்ரீரங்கம் பெரியார் சிலை வைக்க காரணமே தீட்சிதரும் அய்யங்காரும்தான்.. வன்னி அரசு விளாசல்

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கம் பெரியார் சிலைதான் முதலில் அகற்றப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஶ்ரீரங்கத்தில் நேற்று பேசிய அண்ணாமலை, 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே ஶ்ரீரங்கம் கோவிலில் ஒரு பலகையை வைத்திருக்கின்றனர். கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீங்கன்னு தமிழகத்தில் …

Read More »

நம்ம சாலை’ ஆப்.. முதல் வாரமே அமோகம்.. வர்றது எல்லாம் அதுதானா? நெடுஞ்சாலை துறைக்கே ட்விஸ்ட்

சென்னை: தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அறிமுகம் செய்துள்ள, ‘நம்ம சாலை’ ஆப்பில், ஒரு வாரத்தில் 1,300 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 700 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநகர, நகர, ஊரக சாலைகள் குறித்தே 90 சதவீதம் புகார் வருகிறதாம். சாலைகளில் பள்ளம் ஏற்பட்டால் அது குறித்து யாரிடம் புகார் சொன்னால் உடனே நடக்கும் என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.. சாலைகள் தரமற்ற வகையில் …

Read More »

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தலைமையில் நாளை ஆலோசனை

சென்னை: சென்னையில் நாளை காலை 9.30 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, உள்ளிட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Read More »

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரிப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700-ஐ தாண்டியது. உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, …

Read More »

“இனி மாதம் 2 ஆயிரம் மிச்சம்” . முதல்வர் அறிவிப்பால் குஷியான பொதுமக்கள்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாவலூர் சுங்கச்சாவடி சுங்கக் கட்டணத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் பலரும் வரவேற்றுள்ளனர். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஆட்சியர்களுடன் நடைபெற்ற கள ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இது தென்சென்னை பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான …

Read More »