சென்னை: சென்னையில் நாளை காலை 9.30 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, உள்ளிட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.