Breaking News
Home / செய்திகள் / நம்ம சாலை’ ஆப்.. முதல் வாரமே அமோகம்.. வர்றது எல்லாம் அதுதானா? நெடுஞ்சாலை துறைக்கே ட்விஸ்ட்

நம்ம சாலை’ ஆப்.. முதல் வாரமே அமோகம்.. வர்றது எல்லாம் அதுதானா? நெடுஞ்சாலை துறைக்கே ட்விஸ்ட்

சென்னை: தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அறிமுகம் செய்துள்ள, ‘நம்ம சாலை’ ஆப்பில், ஒரு வாரத்தில் 1,300 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 700 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாநகர, நகர, ஊரக சாலைகள் குறித்தே 90 சதவீதம் புகார் வருகிறதாம்.

சாலைகளில் பள்ளம் ஏற்பட்டால் அது குறித்து யாரிடம் புகார் சொன்னால் உடனே நடக்கும் என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.. சாலைகள் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் சாலைகள் அமைக்கப்பட்ட அடுத்த ஒரு மாதத்தில் பள்ளமாகி விடுகின்றன.. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைளை பொறுத்தவரை மத்திய அரசு தான் பராமரித்து வருகிறது.. மாநில அரசின் கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் வராது.. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலித்து சாலைகளை தனியார் நிறுவனங்கள் அமைத்து வருகின்றன.

மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட முக்கிய சாலைகளை நெடுஞ்சாலைதுறை தான் பராமரிக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலை என, 66,382 கி.மீ. தூர சாலைகளை பராமரித்து வருகின்றது. அதேநேரம் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படுவது இல்லை. இவற்றை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் தான் பராமரித்து வருகின்றன.

இந்நிலையில் மாநில அரசின் சாலைகள் சேதம் அடையும் போது, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, ‘நம்ம சாலை’ என்ற பெயரில் மொபைல் போன் ஆப்பை, நவம்பர் 1ம் தேதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்த ஆப்பில் சாலை சேதம் குறித்து செல்போனில் போட்டோ எடுத்து, எந்த ஊர், எந்த பகுதி என்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலைகளில் பழுது என்றால், 24 மணி நேரத்திலும், மற்ற சாலைகளில், 72 மணி நேரத்திலும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நம்ம செயலி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரமாகி உள்ள நிலையில், இதுவரை, 1,300 புகார்கள் வந்துள்ளதாகவும் இதில், 700 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த புகார்களை எப்படி கண்காணித்து அதிகாரிகள் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பது குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்ட போது, ‘நம்ம சாலை செயலிக்கு’ வரும் புகார்களை கண்காணிக்க, அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த குழுவில் உள்ள அதிகாரிகள், நம்ம சாலை செயலியில் வரும் சாலை சேதம் குறித்த புகார்களை, தொடர்புடைய மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

கனவா நினைவா.. ‘பள்ளம் இல்லாத தேசிய நெடுஞ்சாலை’.. மத்திய அரசு சூப்பர் முடிவு.. நிதின் கட்காரி தகவல்

இந்த ஒரு வாரத்தில் நம்ம சாலை ஆப்பில்,, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் குறித்து தான், 90 சதவீத புகார்கள் வருகின்றனவாம். இந்த நம்ம சாலை ஆப் நெடுஞ்சாலை துறைக்கான செயலி என்பதால், மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலை குறித்த புகாரைத்தான் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

பலரும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் குறித்து புகார் அனுப்புவதால் நேரம் விரயமாகுவதாகவும் கூறினார்கள். மாநில நெடுஞ்சாலை மாவட்ட நெடுஞ்சாலை தொடர்பான புகார்களை கண்காணித்து வருகிறோம். பல மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்களுக்கு மழை காரணமாக தீர்வு காண்பதில் சற்று தாமதம் ஏற்படுவதாக கூறினார்கள்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *