Breaking News
Home / செய்திகள் / முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரிப்பு!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரிப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700-ஐ தாண்டியது.

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

இதனிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, “இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய செயலாளர் கோபாலகிருஷணன் தெரிவித்துள்ளார்.

உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700-ஐ தாண்டியது என்று கூறிய அவர், ஒரு மாதத்திற்கு சுமார் 100 உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் மட்டுமே பெறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்குப் பிறகு, உறுப்பு தானம் பற்றிய மக்களின் எண்ணம் நேர்மறை மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்றார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *