Breaking News
Home / செய்திகள் (page 121)

செய்திகள்

காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!

சென்னையில் மது அருந்தி விட்டு ஓட்டியதால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை மதுபோதையில் குபேந்திரன் என்பவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் குபேந்திரனை நிறுத்தி வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தை விருகம்பாக்கம் …

Read More »

சென்னை – நெல்லை இடையே 8 வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை: வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 8 வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி எழும்பூரில் இருந்துநவ. 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.45 மணிக்கு வந்தே பாரத் சிறப்புரயில் (06055) புறப்பட்டு, அதேநாள் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து நவ.10, …

Read More »

ஆன்லைன் சூதாட்டம் திறமைக்கான விளையாட்டா? தமிழக அரசின் தடை சட்ட வழக்கில் ஹைகோர்ட் இன்று தீர்ப்பு!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை …

Read More »

கனிமொழி வந்துட்டாங்க.. ஒரே சொல்லில் மிரண்ட பாஜக.. கனிந்த கரிசனத்தில் கரையும் தூத்துக்குடி.. பலே திமுக

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், இப்போதைக்கு பலம் வாய்ந்த கூட்டணியாக இருப்பது திமுக மட்டுமே.. அந்தவகையில், அடுத்தக்கட்ட அதிரடியில் முனைப்பு காட்ட துவங்கி உள்ளது. சமீபகாலமாகவே, தூத்துக்குடி திமுகவில் சில அரசல்புரசலான தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.. அதாவது, கனிமொழிக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடைவெளி ஏற்பட்டிருப்பதாக கூறப்டுகிறது. உதயநிதி: ஏற்கனவே, திமுகவில் உதயநிதிக்கு தரும் முக்கியத்துவத்தை பார்த்து, கனிமொழி அதிருப்திக்கு ஆளாகி இருப்பதாகவும், அதனால்தான், உதயநிதியின் தூத்துக்குடி நிகழ்வில்கூட, …

Read More »

நியாய விலை கடைகளில்.. நியாயம் கிடைக்க போகுதே.. ரேஷனுக்கு போன முக்கிய உத்தரவு.. நோட் பண்ணுங்க

சென்னை: ரேஷன் கடைகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள், பிரச்சனைகள் தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் …

Read More »

தமிழகத்தில் 100 நாள் வேலை செய்வோரின் ஊதிய பாக்கியை அரசு உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் 66.66 லட்சம் குடும்பங்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெறுகின்றன. இது தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதம் மூன்றில் ஒரு பங்கு மக்களை பாதிக்கும் என்பதால், வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்ததற்காக ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,000 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை …

Read More »

ஒரே மழையால்.. உலகக் கோப்பை பாயிண்ட்ஸ் டேபிளே மாறப்போகுது! செமியில் இந்தியா அந்த அணியை எதிர்கொள்ளுதா?

சென்னை: உலகக் கோப்பை 2023 செமி பைனலில் இந்தியா எதிர்கொள்ள போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. 2023 உலகக் கோப்பை கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. இந்தியா ஏற்கனவே பாதுகாப்பாக செமி பைனலுக்குள் முதல் நாடாக சென்றுவிட்டது. 8 போட்டிகளில் ஆடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கெத்தாக செமி பைனல் சென்றுவிட்டது. இன்னொரு பக்கம் 2 தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா அணியும் செமி பைனலுக்குள் …

Read More »

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் தீவு தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளும் பங்ற்றுள்ளனர். தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள். வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Read More »

சென்னை, காமராஜர் துறைமுகங்கள் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

சென்னை: சென்னை, காமராஜர் துறைமுகங்கள் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் காமராஜர் துறைமுகம் சார்பில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிஇம்மாதம் 5-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது. …

Read More »

சனாதன ஒழிப்பு- எந்த ஆய்வு மூலம் பேசினீங்க? பேச்சை தாக்கல் செய்யுங்க- உதயநிதிக்கு ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை: சனாதன தர்மம் குறித்து எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பேசப்பட்டது? சென்னை கருத்தரங்கில் பேசியது என்ன? என்கிற விவரங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதன தர்ம ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் சேகர்பாபு தரப்பில், ஒரு இந்துவாக பெருமைப்படுகிறேன். …

Read More »