Breaking News
Home / செய்திகள் / கனிமொழி வந்துட்டாங்க.. ஒரே சொல்லில் மிரண்ட பாஜக.. கனிந்த கரிசனத்தில் கரையும் தூத்துக்குடி.. பலே திமுக

கனிமொழி வந்துட்டாங்க.. ஒரே சொல்லில் மிரண்ட பாஜக.. கனிந்த கரிசனத்தில் கரையும் தூத்துக்குடி.. பலே திமுக

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், இப்போதைக்கு பலம் வாய்ந்த கூட்டணியாக இருப்பது திமுக மட்டுமே..

அந்தவகையில், அடுத்தக்கட்ட அதிரடியில் முனைப்பு காட்ட துவங்கி உள்ளது.

சமீபகாலமாகவே, தூத்துக்குடி திமுகவில் சில அரசல்புரசலான தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.. அதாவது, கனிமொழிக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் இடைவெளி ஏற்பட்டிருப்பதாக கூறப்டுகிறது.

உதயநிதி: ஏற்கனவே, திமுகவில் உதயநிதிக்கு தரும் முக்கியத்துவத்தை பார்த்து, கனிமொழி அதிருப்திக்கு ஆளாகி இருப்பதாகவும், அதனால்தான், உதயநிதியின் தூத்துக்குடி நிகழ்வில்கூட, கனிமொழி பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் பரபரத்தன.

அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கு, கனிமொழிக்கு முறையான அறிவிப்பை, கீதாஜீவன் தரப்பு செய்யவில்லை என்றும் செய்திகள் கசிந்தன. இதுபோல இன்னும் பல யூகங்கள் கசிந்து கொண்டிருந்தாலும், அத்தனையும் நொறுக்கி தள்ளிவிட்டு, வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தி, அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாகி வருகிறாராம் திமுக எம்பி கனிமொழி.

தூத்துக்குடி: கடந்த தேர்தலை பொறுத்தவரை, திமுகவின் வெற்றியில் கனிமொழியின் பங்கு அபாரமானவை.. அளவிட முடியாதவை.. அர்ப்பணிப்பு நிறைந்தவை என்றே சொல்லலாம்..

அன்று பொள்ளாச்சி சம்பவம் மற்றும் சாத்தான்குளம் சம்பவம் என தமிழகத்தை உலுக்கிய 2 பிரச்சனைகளை, கையில் எடுத்து போராடியவர்களில் முதன்மையானவராகவும் கனிமொழி திகழ்ந்திருக்கிறார்.. இந்த போராட்டங்களையெல்லாம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோடு மட்டுமே பொருத்தி பார்க்கப்படவில்லை.. மாறாக, தென்மண்டலங்களில் திமுகவின் பலத்தை கூட்ட காரணமாக இவை இருந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

திமுக பலம்: அதனால்தான், தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு தரும்படி 3 வருடங்களுக்கு முன்பேயே அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி கேட்டார்கள்.. சட்டசபை தேர்தலுக்கு முன்பே கனிமொழிக்கு இந்த பதவியை தந்தால், அது திமுகவுக்கு கூடுதல் பலத்தை உருவாக்கும், அமமுக, அதிமுகவின் செல்வாக்கை எளிதாக குறைத்து விடலாம் என்றும் வலியுறுத்தினார்கள்..

அதுமட்டுமல்ல, அன்று மறைந்த தலைவர் கருணாநிதி இருந்தபோது, மு.க.அழகிரி எப்படி செயல்பட்டாரோ, அதுபோலவே தென்மண்டலத்தை தன் வசம் கனிமொழி கொண்டுவந்துவிடுவார் என்றும், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியிருந்ததை நினைவுகூர வேண்டியிருக்கிறது.. அந்த அளவுக்கு கனிமொழியின் செல்வாக்கும், செயல்பாடுகளும் மிகுந்த கவனத்தை கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஏற்படுத்தியபடியே உள்ளது..

இதோ இப்போதுகூட கனிமொழியின் அணுகுமுறையானது மக்களின் கவனம் பெற்று வருகிறது.. ஒருபக்கம் பாஜக எதிர்ப்பு, மறுபக்கம் விறுவிறு செயல்பாடு என களமிறங்கிவிட்டாராம்.. அதைவிட முக்கியமாக, சமீபத்தில் நடந்த மகளிர் மாநாடும், அந்த மாநாட்டில் மூத்த தலைவர் சோனியா காந்தியை வரவேற்றிருந்ததும், தேசிய அளவில் கனிமொழி மீதான கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது..

பிளான்கள்: எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், திமுகவின் கனகச்சிதமான பிளான்களும் துரிதமாகி வருகின்றன. எப்படியும் இந்த முறையும், தூத்துக்குடி தொகுதியிலேயே கனிமொழி போட்டியிட நிறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இதில், முக்கியமானது கனிமொழியின் பிரச்சாரமாகும். எனவே, கனிமொழி + உதயநிதி இவர்கள் 2 பேரும்தான், தமிழகம் முழுக்க திமுகவின் பிரச்சாரங்களை பிரதானமாக முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும்நிலையில், அந்த வியூகங்களை அடியோடு உடைக்கவும், கனிமொழியின் பிரச்சாரம் பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஜெயலலிதா: வழக்கமாக, பெண்கள் ஓட்டு என்பது அதிமுகவில் எப்போதுமே அதிகம்.. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பெரிதாக பெண் தலைவர்கள் யாரும் சோபிக்கவில்லை.. கனிமொழி அளவுக்கு ஈடுகொடுத்து பேசக்கூடிய பேச்சாளர்களும் அதிமுகவில் தற்சமயம் இல்லை.. எனவே, திமுகவில் பெண்களின் ஓட்டுக்களை கணிசமாக பெறும் அளவுக்கு, கனிமொழியின் பலம் தற்போது பெருகியிருப்பதும் பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.

அதேபோல பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்திலும் கனிமொழியின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. நேற்றுகூட அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேட்டார்கள். “அறநிலையத்துறை என்ற ஒன்று பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருக்காது” என்று அண்ணாமலை பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, “ஆட்சிக்கு வந்தால்தானே? பாஜக ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம்” என்று ஒற்றைவரியில் கூலாக பதிலளித்திருந்தார்.

பாஜக, அதிமுக: ஆக, ஒருபக்கம் பாஜக எதிர்ப்பு + மறுபக்கம் மகளிர் ஓட்டுக்கள் + இதற்கு நடுவில் நலத்திட்ட உதவிகள் என எம்பி தேர்தலுக்கு தயாராகி வருகிறாராம் கனிமொழி கருணாநிதி… தொகுதி மக்களும், கனிமொழியின் கனிந்த அன்பில் கரைந்து கொண்டிருப்பதால், இதை அதிமுக, பாஜக கட்சிகள் உற்றுகவனித்து கொண்டிருக்கின்றன.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *