சென்னை: உலகக் கோப்பை 2023 செமி பைனலில் இந்தியா எதிர்கொள்ள போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
2023 உலகக் கோப்பை கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது.
இந்தியா ஏற்கனவே பாதுகாப்பாக செமி பைனலுக்குள் முதல் நாடாக சென்றுவிட்டது. 8 போட்டிகளில் ஆடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கெத்தாக செமி பைனல் சென்றுவிட்டது.
இன்னொரு பக்கம் 2 தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா அணியும் செமி பைனலுக்குள் வந்துவிட்டது. இந்த சீசனில் +1.376 என்று அதிக ரன் ரேட் வைத்து இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவை முந்தி இந்திய அணி +2.456 என்ற ரன் ரேட்டை பெற்றுள்ளது.
இது போக கடைசியாக ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி செமி பைனலுக்குள் நுழைந்துவிட்டது. மேக்ஸ்வெல் ஆடிய அதிரடியான ஆட்டம் காரணமாக அவரின் 201 ரன்கள் காரணமாக ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் செமி பைனலுக்குள் வந்துவிட்டது.
குழப்பம்: இந்திய அணி செமி பைனலுக்கு சென்றுவிட்டது. சம்பிரதாய முறைப்படி இந்திய அணி அடுத்த மேட்சில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வேண்டும். அதைத்தவிர இந்திய அணிக்கு இந்த லீக் ஆட்டங்களில் பெரிய போட்டி எதுவும் இல்லை.
இதனால் தற்போது எமி பைனலுக்கு செல்லும் அணிகளில் கடைசி இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் வாய்ப்பு முன்னர் 30 சதவிகிதத்திற்கும் கீழ் இருந்தது. அது தற்போது 40 சதவிகிதம் ஆகி உள்ளது. நியூசிலாந்து வாய்ப்பு 43 சதவிகிதம் ஆகி உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரில் இன்னும் உயிர் இருக்கிறது. ஆம்.. இனி நடக்கும் போட்டிகளில் பாகிஸ்தான் வரிசையாக அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று.. மீதம் உள்ள போட்டிகளில் நியூசிலாந்து தோல்வி அடைந்தால்.. பாகிஸ்தான் எளிதாக உள்ளே செல்ல முடியும். நான்காம் இடத்தை பிடிக்க ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் எந்த அணி செமிக்கு நுழையும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . அதே சமயம் இன்று பெங்களூரில் நடக்கும் நியூசிலாந்து – இலங்கை போட்டியும் பாயிண்ட்ஸ் டேபிளை மாற்ற வாய்ப்புகள் உள்ளன .
நியூசிலாந்து – இலங்கை போட்டி இன்று மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து தரப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில் அதன்பின் நியூசிலாந்து எல்லா போட்டிகளிலும் வென்றால்.. பாகிஸ்தான் எல்லா போட்டிகளிலும் வென்றால்.. கூட பாகிஸ்தான்தான் செமி பைனலுக்கு செல்லும்.
இந்தியா பாகிஸ்தானை செமி பைனலில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இன்று நடக்கும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் பாயிண்ட்ஸ் டேபிளில் பெரிய அளவில் மாற்றங்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன.