சென்னை: வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 8 வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி எழும்பூரில் இருந்துநவ. 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.45 மணிக்கு வந்தே பாரத் சிறப்புரயில் (06055) புறப்பட்டு, அதேநாள் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து நவ.10, 11,13, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அவர்கள் கூறினர்.