சென்னை: தமிழ்நாட்டில் கடலோரத்தில் உள்ள 14 மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மிக கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி …
Read More »ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி.. மூட உத்தரவிட்ட முதல்வர்..!
சென்னை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டினில் இருந்த உணவுகளை எலி சாப்பிடுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து மருத்துவமனை முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கேண்டில் உள்ள உணவு பண்டங்களை எலி உண்டதாகவும் எலி உண்ட உணவு பண்டங்களை தான் விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்த புகைப்படங்கள் …
Read More »போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாதே விபத்து, உயிரிழப்புக்கு காரணம்- டிடிவி தினகரன்
சென்னை: அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு வேதனை ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அதே விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் …
Read More »சென்னை விமானநிலையத்தில் பயணிகள் குறைவு காரணமாக 6 விமானங்கள் ரத்து
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து, நேற்று முதல் இன்று அதிகாலை வரை குறைந்த பயணிகளின் எண்ணிக்கை காரணமாக வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தொடர்ந்து, அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் சென்னை விமானநிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான முனையங்களில் இயக்கப்பட்ட …
Read More »தியாகி சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் அவருடன் இருந்து சிகிச்சைகளை …
Read More »விசித்திர சாதனை: பந்து வீச்சில் அஸ்வினை முந்திய ரோஹித்!
உலகக் கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது. இந்தப் போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. : ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்? இந்தப் போட்டியில் கேப்டன் …
Read More »ஒரு இன்ச் கூட பாஜக வளரல.. மோடிக்கே 50% சான்ஸ்தான் இருக்கு.. அதிமுக சூப்பர்.. போட்டு தாக்கிய பிரபலம்
சென்னை: “எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என்று புகழாரம் சூட்டிவந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக குறித்து மீண்டும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த வருடம், மூத்த தலைவர்கள், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.. மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆக …
Read More »தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Read More »தீபாவளியையொட்டி அரசு பேருந்துகளில் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்
சென்னை: தீபாவளியையொட்டி அரசு பேருந்துகளில் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர்களுக்குப் பயணம் செய்தனர். தீபாவளியை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில், நேற்று மாலை வரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் பயணித்திருந்தனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், முன்பதிவில்லாத பேருந்துகளை போதிய அளவில் இயக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. குறிப்பாக …
Read More »சென்னை விமான நிலையத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ. 4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஆர். ஸ்ரீனிவாச நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கோலாலம்பூரில் இருந்து ஏ.கே 13 விமானத்தில் சென்னை வந்த ஆண் மலேசிய பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நவம்பர் …
Read More »