உலகக் கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது.
இந்தப் போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி பந்து வீசி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். ரோஹித் சர்மா நெதர்லாந்தின் முக்கியமனா பேட்டர் தேஜா நிதமுன்னாரு விக்கெட்டினை எடுத்து அசத்தினார். இதன் மூலம் அஸ்வினின் சாதனையை முறியடித்துள்ளார்.
:நன்றி பொண்டாட்டி: நடிகர் சூர்யாவின் வைரல் பதிவு!
இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறந்த எகானமி கொண்ட பௌலர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். 5 பந்துகள் மட்டுமே வீசி 1 விக்கெட் எடுத்து 7 ரன்கள் வழங்கினார். இதன் மூலம் எகானமி 3.40 உடன் அஸ்வினை (3.65) பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 7வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் உள்ள வீரர்கள்:
ரோஹித் சர்மா- 3.40
ரவி அஸ்வின் – 3.65
ஜஸ்ப்ரித் பும்ரா – 3.97
ரவீந்திர ஜடேஜா – 3.97
மொஹமது நபி – 4.13