Breaking News
Home / செய்திகள் (page 73)

செய்திகள்

சென்னை பெரும்பாக்கத்தில் அதிர்ச்சி.. ஸ்டேஷன் வாசலில் ஆட்டோவை நிறுத்திய நபர்..

சென்னை: வெறும் 1000 ரூபாய்க்காக கத்தரிக்கோலால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார் 21 வயது இளைஞர்.. என்ன நடந்தது சென்னை பெரும்பாக்கத்தில்? சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.. 22 வயதாகிறது.. சென்டரிங் வேலை செய்து வருகிறார்.. இவரது நண்பர் ராஜேஷ்.. 21 வயதாகிறது.. இவர்கள் இருவருமே இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள்.. கார்த்திக்: சில தினங்களுக்கு முன்பு, கார்த்திக்கிடம் 1000 ரூபாய் கடனாக பெற்றுள்ளார் ராஜேஷ்.. ஆனால், குறிப்பிட்ட …

Read More »

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியோருக்கு உணவு விநியோகம்.. பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர் : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை : ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியோருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “நெல்லை மாநகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறேன். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உட்பட 4 மாவட்டங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று அல்லது நாளை வர வாய்ப்பு உள்ளது.தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொன்டு …

Read More »

லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது 2-வது முறையாக புகார்: டிஜிபிக்கு அமலாக்கத் துறை நினைவூட்டல் கடிதம்

சென்னை: அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2-வது முறையாக புகார் அளித்துள்ளனர். இதை டிஜிபிக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கித் திவாரி பணியாற்றிய மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் அன்று மாலை முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் விடிய, விடிய மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் …

Read More »

நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் சந்திப்போம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்ந்த தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை எழுப்பூரில் நடைபெற்றது. ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு’, என்ற பெயரில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகரன், வைத்திலிங்கம், புகழேந்தி, மாவட்ட செயலாளர்கள், அமைப்பு …

Read More »

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் விதிமீறலா? – விண்ணப்பங்கள் ஏற்கப்படுமா என மக்கள் சந்தேகம்

சென்னை: மிக்ஜாம் புயல் கடந்த டிச. 3, 4 தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வாழ்வாதாரம் பாதி்க்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதில், சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டில் 4 வட்டங்கள், காஞ்சிபுரத்தில் 2 மற்றும் திருவள்ளூரில் 6 வட்டங்களில் உள்ள …

Read More »

பிரதமர் மோடியுடன் முதல்வர் இன்று சந்திப்பு: புயல், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை

சென்னை: இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கனமழை பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து பிரதமரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 3, 4-ம் தேதிகளில் வட தமிழக கடலோர பகுதியை நெருங்கி வந்தது. இதனால் ஏற்பட்ட காற்று, அதிகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வெள்ள பாதிப்புகள் …

Read More »

உடைந்த பாதாளச் சாக்கடை மூடிகள், சாலைகளில் பொங்கி வழியும் கழிவுநீர்! – திருவல்லிக்கேணி மக்கள் அவதி

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடையின் மூடிகள் சிதிலமடைந்தும், அவற்றில் பலவற்றில் கழிவுநீர் பொங்கி வழிந்து சாலைகளைச் சாக்கடை வெள்ளமாக மாற்றிக்கொண்டும் இருக்கின்றன. பல நாள்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்த அவலம் தொடர்கதையாக நீண்டுவருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பாரதி சாலை, பதிவுத்துறை அருகிலுள்ள பாதாளச் சாக்கடையில் பொங்கி வழியும் கழிவுநீர் இது குறித்த உண்மைநிலையை அறிவதற்காக திருவல்லிக்கேணி பகுதிக்கு ஸ்பாட் …

Read More »

4 மாவட்ட மீட்பு பணிக்காக முப்படைகளின் உதவியை கோரிய தமிழ்நாடு அரசு! தலைமைச் செயலாளர் பேட்டி

சென்னை: சென்னையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஒரே நாளில் ஒரு ஆண்டிற்கான மழை: “நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துள்ள வரலாறு காணாத மழைப் பொழிவால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது. நெல்லையில் விரைவில் தண்ணீர் …

Read More »

தொடர்ந்து சரியும் தங்கம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலை அதே விலையில் நீடித்து வந்தது. இந்த …

Read More »

“புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இனியாவது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – அன்புமணி

சென்னை: ‘காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தென் மாவட்டங்களில் வரலாறு மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. காயல் பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 …

Read More »