Breaking News
Home / செய்திகள் (page 71)

செய்திகள்

விருதுகளுக்கு தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: விருதுகளுக்கு தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக அர்ஜுனா விருதுக்காக தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபடி வீரர் பவன்குமார் உள்ளிட்ட 26 பேருக்கும், தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள இறகுபந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி …

Read More »

வெள்ள பாதிப்புகள்… தென்மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு!

தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. நெல்லையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மழை பாதிப்பு 2023 இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை மவட்டங்களில் இன்று …

Read More »

வடசென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனல்மின் நிலையம் ஜனவரி முதல் செயல்படும்: மின்வாரிய உயர் அதிகாரிகள் தகவல்

சென்னை: வடசென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல்செயல்படத் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரி மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும், கோடைக் காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயர்ந்தும் காணப்படும். மின் தேவையைப் பூர்த்திசெய்ய மின்வாரியம் தனது சொந்த உற்பத்தியைத் …

Read More »

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான ரூ.4 ஆயிரத்து 442 கோடி மதிப்பிலான டெண்டரை தனியார் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒதுக்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் செய்து 660 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட கூடுதல்அலகை அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் …

Read More »

கனமழைக்கு நடுவே 2 நாட்கள் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கி தவித்த பயணிகள்: சிறப்பு ரயில் மூலம் நேற்று சென்னை திரும்பினர்

சென்னை: திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு, ரயிலில் இருந்த 1,000 பயணிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே 2 நாட்களுக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி …

Read More »

20,000 லிட்டர் எண்ணெய் கழிவை அகற்றியாச்சு.. எண்ணூரில் சிறப்பு முகாம்கள்.. மாநகராட்சி ஆணையர் தகவல்!

சென்னை: எண்ணூர் பகுதியில் இதுவரை 20 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பெய்த கனமழையின்போது பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து சுமார் 48,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக சிபிசிஎல் நிறுவனத்துக்குள் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆலை வளாகத்துக்குள் தேங்கி …

Read More »

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம்..!!

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்த மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. …

Read More »

திட்டமிட்டபடி 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.. மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை : பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் உடைமைகளை இழந்து தவித்தனர். அதே போல் கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்கள் அதி கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மாணவர்கள் …

Read More »

பள்ளி மாணவர்கள் கையில் இருசக்கர வாகனம்: ஆபத்தை தவிர்க்க பெற்றோரின் கண்டிப்பு அவசியம்

சென்னை: பள்ளி பருவத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, சிறு வயதில் இருந்தே அவர்களை கண்டிப்புடன் பெற்றோர் வளர்க்க வேண்டும் என குழந்தை உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே பள்ளி பருவத்தின்போது சிறார்கள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுத்தும் விபத்துகள், அதிர்ச்சியடையச் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று …

Read More »

பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாள்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அவரது உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவரது உருவப் படம்அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்பழகனின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல …

Read More »