Breaking News
Home / செய்திகள் / எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான ரூ.4 ஆயிரத்து 442 கோடி மதிப்பிலான டெண்டரை தனியார் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒதுக்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் செய்து 660 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட கூடுதல்அலகை அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) கடந்த 2019-ம் ஆண்டு டெண்டர் கோரியது. அந்த டெண்டரில் வெற்றி பெற்றலான்கோ என்ற நிறுவனம் பணிகளை முடிக்காமல் கைவிட்ட நிலையில், அந்த டெண்டர் பிஜிஆர் எனர்ஜி என்ற மற்றொரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி டெண்டருக்கான மொத்த தொகையில் 10 சதவீதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் செலுத்த வேண்டிய தொகையை 16 மாதங்களாக செலுத்தவில்லை என்பதால் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து கடந்த 2021 ஏப். 23-ம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிஜிஆர் எனர்ஜிநிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மீண்டும் டெண்டர் கோரக்கூடாது என்றும், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டுமென இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பிஜிஆர் நிறுவனத்துக்கே வழங்கி டான்ஜெட்கோ கடந்த 2022 மார்ச்மாதம் உத்தரவிட்டது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும், எனவே இதுதொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவன தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இதற்கான டெண்டரை எடுத்த லான்கோ நிறுவனம் பாதியில் வெளியேறிய நிலையில், விதிகளின்படி டெண்டரில் பங்கேற்று இரண்டாவது நிலையில் இருந்த பெல் நிறுவனத்துக்குதான் அந்த டெண்டரை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் அந்த டெண்டரை பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒதுக்கியது சட்டவிரோதமானது என்பதால் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை பணிகளைகூட தொடங்கவில்லை. விதிகளுக்குப் புறம்பாக இந்த டெண்டர் அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும்பிப்.22-க்கு தள்ளிவைத்தனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *