சென்னை: கடந்த காலங்களைவிட இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புயல் பாதித்த பிறகு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனே களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு தன் சக்திக்கு ஏற்ப மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது; அதை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் களத்துக்கு சென்று மக்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி …
Read More »மிக்ஜாம் பாதிப்பு | சேதமான வாகனங்களுக்கு விரைந்து காப்பீட்டுத் தொகை வழங்க நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்
சென்னை: மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான வாகனங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் சேதமடைந்துள்ளன. காப்பீடு செய்யப்பட்ட சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவாக …
Read More »குட் நியூஸ்..! இன்று சர்ரென குறைந்த தங்கம் விலை..! சவரனுக்கு 560 ரூபாய் குறைவு..!
சென்னை: தங்கம் என்பது மீது எப்போதும் மக்களுக்கு மோகம் இருந்தே வந்துள்ளது. அதிலும் இந்தியர்களுக்குத் தங்கத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கவே செய்கிறது. இதன் காரணமாகவே இன்றும் கூட தங்கத்தைத் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிப்பாகக் கருதுகின்றனர். சிறுக சிறுக தங்கத்தைச் சேர்த்து வைப்பதையே மக்கள் விரும்புகின்றனர். கொரோனா காலத்தில் அனைவரது வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகச் சிறு தொழில் செய்வோர், சின்ன பிஸ்னஸ்மேன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். …
Read More »வந்துருச்சு மெசேஜ்.. ரெடியா மக்களே.. காலை 9 முதல் மாலை 4 மணி வரை.. ஸ்பெஷல் முகாம்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 3000 இடங்களிலும், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்களும் இன்று நடைபெற உள்ளன. மிக்ஜாம் புயலின் தாக்கம் இன்னமும் அடங்கவில்லை.. பெரும்பாலான குடியிருப்புகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை.. ஒரு ஏரியாவில் இருந்து இன்னொரு ஏரியாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.. தமிழக அரசு: எப்போதுமே …
Read More »மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்குதா? பேரிடர் நிதி வழங்க ரூல்ஸ் தெரியுமா? பாயிண்ட்களை அடுக்கும் பாஜக!
சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என்றும், தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பது கூட தெரியாமால் சிலர் நீட்டி முழக்கி மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என விமர்சிப்பது முறையல்ல என்றும் தமிழக பாஜக காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக …
Read More »விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை
சென்னை: மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள …
Read More »தென் மாவட்டங்களில் மழை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி பரவலாக கனமழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.9) ஒருநாள் மழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி, திருச்செந்தூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 18 …
Read More »நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது என்பதற்கு இபிஎஸ் கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை: நீதிமன்றம்
சென்னை: அவதூறு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாததற்கு முன்னாள் முதல்வர் இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என தெரிவித்துள்ள நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் கூறியுள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளரும், …
Read More »மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து உரங்களும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: யூரியா, டிஏபி உள்ளிட்ட அனைத்து உரங்களும் கிடைக்க, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரிப் பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் சம்பா மற்றும் தாளடி நடவு தீவிரமடைந்திருக்கும் நிலையில், அடியுரமாகவும், மேலுரமாகவும் பயன்படுத்துவதற்குத் தேவையான யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு …
Read More »திமுக இளைஞரணி சேலம் மாநாடு டிச.24-க்கு மாற்றம்
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு காரணமாக, சேலத்தில் டிச.17-ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு டிச.24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிச.17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணியினர் மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில், ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் பெருவெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மீட்பு, நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக …
Read More »