சென்னை: தங்கம் என்பது மீது எப்போதும் மக்களுக்கு மோகம் இருந்தே வந்துள்ளது. அதிலும் இந்தியர்களுக்குத் தங்கத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கவே செய்கிறது.
இதன் காரணமாகவே இன்றும் கூட தங்கத்தைத் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிப்பாகக் கருதுகின்றனர். சிறுக சிறுக தங்கத்தைச் சேர்த்து வைப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.
கொரோனா காலத்தில் அனைவரது வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகச் சிறு தொழில் செய்வோர், சின்ன பிஸ்னஸ்மேன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அனைவரும் வீடுகளிலேயே முடங்கியதால் இவர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதுபோன்ற நேரங்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருந்தது தங்கம் தான். சேமிப்பாக இருந்த தங்கத்தை விற்றும் வைத்தும் தான் பலரும் நிலைமையைச் சமாளித்தனர்.
இதன் காரணமாகவே தங்கம் தான் முதல் முதலீடு என்று பலரும் கூறி வருகின்றனர். குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். ஆனால், நீண்ட கால நோக்கில் நாம் பார்க்கும் போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 70 ரூபாய் குறைந்து, ரூ.5,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ரூ.46,120-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,780-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 58 ரூபாய் குறைந்து, ரூ.4,722-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 80,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,000 ரூபாய் குறைந்து, ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.