சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யபடுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற …
Read More »அண்ணாமலை நடைபயணம் டிச.16-க்கு தள்ளிவைப்பு
சென்னை: ஊழலுக்கு எதிராக ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தை, ராமேசுவரத்தில் ஜூலை 28-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நடைபயணம் மேற்கொள்ளும் இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கியும், திமுக அரசுக்கு எதிராகவும் அண்ணாமலை பேசி வருகிறார். இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை …
Read More »அதிமுக பெயர், சின்னம் விவகாரம் | “தனி நீதிபதி உத்தரவை மீறவில்லை” – உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தகவல்
சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை தற்போது வரை மீறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னீர்செல்வத்துக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், …
Read More »நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: “நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாநிலங்களவையில் எம்.பி. எம்.எம்.அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது …
Read More »மிக்ஜாம் பாதிப்பு | கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி நகல்களைப் பெற சிறப்பு வலைதளம்
சென்னை: “மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது” என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மழை, …
Read More »டிசம்பர் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம்
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியில் விளையாடுவார்கள். இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் சராசரி எலோ …
Read More »வளர்ந்த நாடாவதற்கு வழிகளை காண வேண்டும்: கல்வியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்
சென்னை: இந்தியாவை வேகமாக வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வழிகளை கண்டறிவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிந்திக்க வேண்டும் என ‘வளர்ச்சியடைந்த இந்தியா-2047’ பயிலரங்கில் பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா-2047 – இளைஞர்களின் குரல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த முயற்சியின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நாடுமுழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி …
Read More »ஜம்மு காஷ்மீர் விவகாரம்; தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
சென்னை: ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாநிலங்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாஜகவின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கின்ற மூன்று கொள்கைகள்; 1. பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டுவது 2. காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370 பிரிவை நீக்குதல் 3. …
Read More »வராக்கடனா? வஜாக்கடனா? வரும் ஆனா வராது என்றால் பெயர் என்ன? நிதி அமைச்சரை சீண்டும் சு.வெங்கடேசன் எம்பி
சென்னை: வசூலுக்கும் வராக்கடனுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளதே. இதற்கு பெயர் என்ன? வரும் ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன? என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இன்றி காரசார விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது. அவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் வைக்கும் கேள்விகளுக்கு …
Read More »குழந்தை அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் பரபரப்பு பேட்டி
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரத்தில் குழந்தையின் உடலை சரியாக மூடாமல் வழங்கிய பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு …
Read More »