சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரத்தில் குழந்தையின் உடலை சரியாக மூடாமல் வழங்கிய பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் தந்தை தாமே இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார். இயற்கை முறை சிகிச்சை காரணமாகவே பச்சிளம் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இவ்வாறு கூறினார்.