Breaking News
Home / செய்திகள் / வராக்கடனா? வஜாக்கடனா? வரும் ஆனா வராது என்றால் பெயர் என்ன? நிதி அமைச்சரை சீண்டும் சு.வெங்கடேசன் எம்பி

வராக்கடனா? வஜாக்கடனா? வரும் ஆனா வராது என்றால் பெயர் என்ன? நிதி அமைச்சரை சீண்டும் சு.வெங்கடேசன் எம்பி

சென்னை: வசூலுக்கும் வராக்கடனுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளதே. இதற்கு பெயர் என்ன? வரும் ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன?

என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இன்றி காரசார விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது. அவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் வைக்கும் கேள்விகளுக்கு சம்மபந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மக்களைவை தொகுதி உறுப்பினரும் சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்தவருமான சு.வெங்கடேசன், வராக்கடன் குறித்து நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சகம், கடந்த 9 ஆண்டுகளில் வராக்கடன் 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலான வராக்கடன் 1.61 லட்சம் கோடி என பதில் அளித்துள்ளது. இது குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருக்கும் சு.வெங்கடேசன் எம்.பி கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் பற்றி நான் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 2014 -15 இல் இருந்து 2022 -23 வரை வராக் கடன் என அறிவிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற கேள்விக்கு ரூ 10.42 லட்சம் கோடி என்று பதில் அளித்துள்ள அமைச்சர் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் எவ்வளவு என்ற கேள்விக்கு ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே என்று பதில் தந்துள்ளார்.

எப்போது வராக்கடன் பற்றி பேசினாலும் வராக்கடன் (Written off) என்றால் வராமலே போகிற கடன் (Waive off) அல்ல, அதற்கு பின்னரும் வசூலிக்கப்படும் என்று நீண்ட விளக்கத்தை நிதியமைச்சர் தருவார். எல்லோருக்கும் ஏதோ இந்த வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடியையும் விரட்டி விரட்டி ஒன்றிய அரசும், வங்கிகளும் வசூலித்து விடும் என்று எண்ணத்தை நிதியமைச்சர் உருவாக்குவார்.

இதைப் பற்றி பேசுபவர்களுக்கு ஏதோ பொருளாதாரமே தெரியாது என்ற எள்ளல் நடையிலும் பேசுவார். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் வராக்கடன் 10.42 லட்சம் கோடி. ஆனால் இதே காலத்தில் வசூலான வராக்கடன் 1.61 லட்சம் கோடி என அமைச்சர் பதில் அளித்துள்ளார் என்றால் நமக்கு எழும் கேள்வி இதுதான். நிதியமைச்சரே வசூலுக்கும் வராக்கடனுக்கும் இடையே இவ்வளவு வித்தியாசம் உள்ளதே. இதற்கு பெயர் என்ன? வரும் ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *