சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்து, ₹46,000-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ₹5750-க்கும் …
Read More »பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே .. யாரென கேட்ட நாங்கள் அவைக்கு வெளியே! : சு வெங்கடேசன் காட்டம்
சென்னை : பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே என்று மதுரை எம்.பி.சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாகர் ஷர்மாவுக்கு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா தான் பார்வையாளர் பாஸ் வழங்கி உள்ளார். இந்த விவகாரத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை …
Read More »“குரூப் 2 முடிவுகள் தாமதம்… மாணவர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக் கூடாது” – அன்புமணி
சென்னை: தொகுதி 2, 2ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித் தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் ஏமாற்றியிருக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித்தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் …
Read More »விமான நிலையத்தில் தமிழ் பெண்ணிடம் இந்தி கற்க சொன்ன விவகாரம்: அரசியல் தலைவர்கள் கண்டனம்
சென்னை: கோவா விமான நிலையத்துக்கு வந்த தமிழ் பெண் பொறியாளர் ஒருவரிடம், இந்தி தெரியாதா என கேட்டு,இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் அப்பெண்ணை அவமதித்துள்ளார். இதற்கு தமிழக முதல்வர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோவா விமான நிலையத்தில் தமிழ்பெண் ஒருவரிடம் இந்தியில் …
Read More »பாரம்பரிய மருத்துவம் வளர அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
சென்னை: பாரம்பரிய மருத்துவம் வளர,அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில், ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில்கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆயுஷ்மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயம் வழங்கி கவுரவித்தார். பின்னர், அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஆளுநர் பேசியதாவது: நவீன மருத்துவத்துக்கான மாற்று மருத்துவம் குறித்து யாரும் சிந்திப்பதில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஏராளமான ஞானம் …
Read More »மக்கள் விருப்பத்துக்கு மாறாக வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க கூடாது: இபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: மக்கள் விருப்பத்துக்கு மாறாக வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மண் ஆசை சிறிதும் இல்லாத வள்ளலார், சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் நிலப் பரப்பை சாதாரண ஏழை, எளிய மக்களிடமிருந்து பெற்றதற்குகாரணம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தனி நெறியை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் …
Read More »‘மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகளுக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டோ ஜியோ முடிவு
சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் – அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, கடந்த 2017 முதல் செயல்பட்டு வருகிறது. இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக ஆளும் ஆட்சியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், …
Read More »குடி பழக்கத்தை வருவாய் ஈட்டும் வழியாக எண்ணக் கூடாது: டாஸ்மாக் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை: குடி என்னும் தீய பழக்கத்துக்கு மக்கள் ஆளாவதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கும், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களுக்கும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் வீசுவதை தடுக்கும் வகையில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது. அதன்படி மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்து காலி …
Read More »இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? : பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
சென்னை :இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். ‘ நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி …
Read More »பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் நலன் காக்கும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தினசரி சுமார் 32 லட்சம் லிட்டர் பாலை 3.87 லட்சம் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ …
Read More »