Breaking News
Home / செய்திகள் (page 45)

செய்திகள்

தமிழகத்தில் ரயில் பாதை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை: ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள புதிய ரயில் பாதை, இரட்டை பாதை திட்டங்களுக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. தாம்பரத்தை ரயில் முனையமாக மாற்ற பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகள், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் அவசியமாகிறது. அதன்படி, புதிய இரட்டை பாதை, அகலப் பாதைகள் ஏற்படுத்துவது, அடிப்படை வசதிகள், ரயில் பாதுகாப்பை மேம்படுத்துவது …

Read More »

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ – ஜியோ கடிதம்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டிலும், அதன்பின் 2016-ல் அதிமுக ஆட்சி தொடர்ந்த போதும் அரசு …

Read More »

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வை (மெயின் தேர்வு) கடந்தாண்டு நவம்பர் 4, 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் …

Read More »

Rolls Royce Spectre EV – இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனம் அறிமுகம்!

சென்னை: இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெக்டர் இவி’ (Spectre EV) வாகனம் அறிமுகமாகி உள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். 1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். கடந்த 2005 முதல் இந்த நிறுவனத்தின் ஆண்டு வாரியான கார் …

Read More »

ஈழத் தமிழர்களுக்கு ‘பாஸ்போர்ட்’! முதல் வரலாற்றுச் சாதனை! இனி எங்கும் பறக்கலாம்!

சென்னை: இலங்கை வரலாற்றில் இதுவரை நடக்காத சரித்திர சாதனை இப்போது நடந்துள்ளது. முதன்முறையாகத் தமிழக அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ‘சிறப்பு பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே 1982 ஆண்டு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அதன் விளைவாக இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறினர். நார்வே, கனடா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் நாளடைவில் அந்நாட்டுக் …

Read More »

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தினார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் அரசுமரியாதையுடன் கோயம்பேட்டில்உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர்சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், …

Read More »

மக்களவை தேர்தல் 2024 | தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்தது மதிமுக

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைத்துள்ளது மதிமுக.மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து நேற்று (ஜன.19) அறிக்கை வெளியிட்டது.இந்நிலையில், தொகுதி உடன்பாடு …

Read More »

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்: புதுப்பொலிவுடன் டிடி தமிழை தொடங்கினார் பிரதமர் மோடி

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 13-வது கேலோ இந்தியா போட்டி, ரூ.39 கோடியில் மேம்படுத்தப்பட்ட, ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி என்ற புதுப்பொலிவு பெற்ற சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 13-வது கேலோ இந்தியா போட்டிகள் ஜன.19 தொடங்கி வரும் 31-ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. போட்டிக்கான சுடரை ஏற்றி வைத்து பிரதமர் மோடி …

Read More »

ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் ஆதாயம் தேட பிரதமர் மோடி முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியை ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக ரூ.11 ஆயிரம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ தொலைவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று மசூதி கட்டுவதற்கான முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முஸ்லிம் அமைப்புகள் தொடங்கிய அறக்கட்டளையில் ரூ.45 லட்சம்தான் நிதி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ராம ஜென்ம …

Read More »

இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இருந்து பினாங் நகரத்துக்கு நேரடி விமான சேவை: பினாங் சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: மலேசியா சுற்றுலாத் துறை சார்பில் பினாங் மாநிலத்துக்கு இந்திய சுற்றுலா பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையிலான சுற்றுலா கண்காட்சி ஜன.15 முதல் ஜன.22-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக பினாங் சுற்றுலா கண்காட்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பினாங் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வாங் ஹான் வாய்,பினாங் வர்த்தக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின்குணசேகரன், இயக்குநர் டேட்டின்பாரதி, …

Read More »