Breaking News
Home / செய்திகள் (page 23)

செய்திகள்

மின்வாரிய ஊழியருக்கான முத்தரப்பு ஒப்பந்தம்: 22 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன

சென்னை: மின்வாரியம் 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தில் 22 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன. கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியம் மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. மின்வாரியத்தில் 90 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். மின்வாரியம் தனி, தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்டஅனைத்தும் தொடர்ந்து …

Read More »

தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிப்பு: சென்னை காவல் ஆணையர் தகவல்

சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், போலீஸாரின் தளவாடங்கள், பொருட்கள் வைப்பதற்கு புதிய அறை அமைக்கப்பட்டது. மேலும், காவலர் நலன் உணவகம் குளிர்சாதன வசதியுடன் நவீனப்படுத்தபட்டது. இவற்றை சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார். மேலும், சேதமடைந்த புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தின் நுழைவு வாயிலில் 152 மீட்டர்தூரத்துக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் …

Read More »

முரசொலி நில விவகாரம் | மேல்முறையீட்டு வழக்கில் ஆணையம், பாஜக நிர்வாகி பதிலளிக்க உத்தரவு

சென்னை: முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தேசிய எஸ்சி ஆணையம் மற்றும் புகார்தாரரான பாஜக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதுவரை முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம், பஞ்சமி நிலம் எனக் கூறி தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் …

Read More »

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை: ஆளுநர் உரையில் திட்டவட்டம்

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: சங்ககால தமிழர் கடைபிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும், கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்ற இந்த மகத்தான வரிகள்தான்இந்த அரசை வழிநடத்திச் செல்கின்றன. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணிக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மையினருக்கு துணை: சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் …

Read More »

தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நயினார் நாகேந்திரன், கே.எஸ் அழகிரி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய …

Read More »

ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் :திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை : ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப் பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் …

Read More »

‘பாஜகவுடன் கூட்டணி இல்லை… இல்லை..!’ – இறுதியாகவும், உறுதியாகவும் சொன்னார் இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லை. இறுதியாகவும், உறுதியாகவும் சொல்கிறோம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் கோவிந்தராசன், பர்கூர் ஒன்றியக் குழு தலைவர் கவிதா கோவிந்தராசன் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் பழனிசாமி பேசியதாவது:மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கிருஷ்ணகிரியை தனி மாவட்டமாக உருவாக்கினார். இங்கு அதிமுக …

Read More »

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி புறக்கணித்ததால் சலசலப்பு

சென்னை: இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது. தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து அவையிலேயே அமர்ந்திருக்கிறார் ஆளுநர். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். முன்னதாக, சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சரியாக 10 மணிக்கு ஆளுநர் உரை …

Read More »

ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் விபத்துகளை தடுக்கும் வகையில், சிக்னல்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் விபத்துகள் நேரிட்டன. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு அக்டோபரில் காலி மின்சாரரயிலின் பெட்டிகள் …

Read More »

இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடக்கம்!

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன. பிப்ரவரி 29ம் தேதி வரை இந்த தேர்வுகள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் 12 ம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், 11ம் வகுப்புக்கு …

Read More »