Breaking News
Home / செய்திகள் / தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிப்பு: சென்னை காவல் ஆணையர் தகவல்

தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிப்பு: சென்னை காவல் ஆணையர் தகவல்

சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், போலீஸாரின் தளவாடங்கள், பொருட்கள் வைப்பதற்கு புதிய அறை அமைக்கப்பட்டது. மேலும், காவலர் நலன் உணவகம் குளிர்சாதன வசதியுடன் நவீனப்படுத்தபட்டது. இவற்றை சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.

மேலும், சேதமடைந்த புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தின் நுழைவு வாயிலில் 152 மீட்டர்தூரத்துக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் கயல்விழி, துணை ஆணையர்கள் ஜெயகரன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில்காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றும் பணி 90சதவீதம் முடிவடைந்து விட்டது.பழைய பட்டியல் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பதற்றமானவை, பதற்றம்இல்லாதவை என்று வாக்குச்சாவடி புதிய பட்டியல் தயார்செய்யப்படும்.

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் ‘சைபர் க்ரைம்’ போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களை பகிர முடியாது. தற்போது வெளிவந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *