சென்னை: காற்றாலை சீசன் நிறைவடைந்த நிலையிலும், காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, உடுமலை, தேனி, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 8,894 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மின்சார உற்பத்தி ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தினசரி உற்பத்தி …
Read More »சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
சென்னை: சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான வல்லுநர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், டிஆர்டிஓ முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர் மற்றும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஆகியோர் உரையாடினர். அப்போது, கேள்விகளுக்கு பதிலளித்து சோம்நாத் கூறியதாவது: சந்திராயன் 3 என்பது மக்களின் மனங்களுடன் தொடர்புடையது. …
Read More »பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்
சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. …
Read More »அடையார், தேனாம்பேட்டை மண்டலங்களில் நாளை கழிவுநீர் சேவை பாதிக்கும்
சென்னை: கழிவுநீர் உந்து குழாய் இணைப்பு பணி காரணமாக அடையார், தேனாம்பேட்டை மண்டலங்களில் நாளை கழிவுநீர் சேவை பாதிக்கும். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையார் எல்.பி.சாலை (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் அருகில் கழிவுநீர் உந்து குழாய்களை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நாளை (ஜன. 9) காலை 10 மணி முதல் 10-ம் தேதிகாலை 6 மணி …
Read More »பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொங்கல் பரிசு விநியோகத்தை முன்னிட்டு உரிமைத்தொகை பெறும் 1.15 கோடி மகளிருக்கு இம்மாதம் 10-ம் தேதியே தொகை விடுவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பல ஆண்டுகளாக, நியாயவிலைக் கடைகள் …
Read More »சென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை தொடங்கும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மேம்படுத்த, அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்று, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகிறது. இதைக் கருத்தில் கொண்டே, …
Read More »தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ஓய்வூதியர்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க முதல்வர் …
Read More »“இணைப்பு வசதியின்றி திணறும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும்” – அன்புமணி
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான். கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் …
Read More »“அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல்” – ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார். 1992இல் அறிமுகமானதிலிருந்து 30 ஆண்டுகளாக ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கிறார் ரஹ்மான். கடைசியாக 2003ஆம் ஆண்டில் …
Read More »சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வு: 472 வழக்கறிஞர்கள் தேர்ச்சி
சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வெழுத மொத்தம்12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது. இவற்றில் 2,544 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.அவர்களுக்கான முதன்மைத் தேர்வு நவ. 4, 5-ம் தேதிகளில்நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. …
Read More »