சென்னை: கழிவுநீர் உந்து குழாய் இணைப்பு பணி காரணமாக அடையார், தேனாம்பேட்டை மண்டலங்களில் நாளை கழிவுநீர் சேவை பாதிக்கும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையார் எல்.பி.சாலை (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் அருகில் கழிவுநீர் உந்து குழாய்களை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நாளை (ஜன. 9) காலை 10 மணி முதல் 10-ம் தேதிகாலை 6 மணி வரை எல்.பி.சாலை கழிவுநீர் உந்து நிலையம்செயல்படாது.
இதனால் அடையார், தேனாம்பேட்டை மண்டலங்களில் சில இடங்களில் உள்ள இயந்திர நுழைவு வாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்படலாம்.
எனவே அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றலாம். உதவிக்கு தேனாம்பேட்டை பகுதி பொறியாளர் -81449 30909, துணை பகுதிப் பொறியாளர் -8144930224, 8144930225, 8144930226, அடையார் மண்டல பகுதி பொறியாளர் – 81449 30913, துணை பகுதிப் பொறியாளர் – 8144930238, 8144930239, 8144930240, 8144930249ஆகிய எண்களை தொடர்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.