சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (30.01.2024) ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் (நிலை – 3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் (நிலை-3) பணியிடத்திற்கு …
Read More »“காந்தி நினைவு நாளில் மதவெறிக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம்” – வைகோ அழைப்பு
சென்னை: “மதவெறிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்” என்று மதிமுக பொதுச் செயலாளார் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30.01.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை …
Read More »தமிழகத்தில் 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 8 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை: அமைச்சர் முத்துசாமி தகவல்
சென்னை: தமிழகத்தில் தற்போது 750 சதுரமீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறையை மாற்றி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) தமிழக பிரிவின் சார்பில்,‘ ஸ்டேட்கான்’ எனப்படும் 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, சென்னையில் …
Read More »ஸ்பெயினில் ஐரோப்பிய முதலீட்டாளர்களுடன் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள்
சென்னை: வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக ஏற்கெனவே தமிழகத்தில் முதலீடு …
Read More »தென் மாவட்ட பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து புறப்படும்; கோயம்பேட்டில் இருந்து இயங்காது: அமைச்சர் அறிவிப்பு
சென்னை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ கடந்த டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் …
Read More »இந்திய சந்தையில் ரியல்மி 12 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 12 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 12 புரோ+ 5ஜி போனும் அறிமுகமாகி உள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை …
Read More »6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. இன்று (ஜன. 30, 2024) முதல் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் …
Read More »100 கிராமங்களில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ஆய்வு
சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அதிகளவு தயாரிக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 கிராமங்களில் சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒரு கிலோ வாட் சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி …
Read More »பிப். 3, 4 தேதிகளில் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை: அடுத்த வாரத்துக்குள் இறுதி செய்து பட்டியலை வெளியிட திட்டம்
சென்னை: அடுத்த வாரத்துக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பிப். 3, 4 தேதிகளில் மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள …
Read More »கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை லூலூ மால் அமைக்க தரப்போவதாக வதந்தி: அரசு விளக்கம்
சென்னை: சர்வதேச வணிக நிறுவனமான லூலூ மால் அமைக்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் காலி இடத்தை தரப்போவதாக தகவல் பரவியது. இதை மறுத்து தமிழக அரசு வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். இதை உண்மை என நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக …
Read More »