Breaking News
Home / செய்திகள் (page 44)

செய்திகள்

“திமுக ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிராக சித்தரிக்க பாஜகவுடன் ஆளுநர் ரவி கூட்டு” – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ‘ஆளுநர் கூறியதைப் போல், இந்த ஆட்சியில், எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது. தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி இருப்பது போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காக, ஆளுநரும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்’ என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயிலைத் …

Read More »

மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், ‘நாங்கள் ஐபிஎல் …

Read More »

கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு! சென்னையில் காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: அஸ்ஸாமில் படாதிரவாதான் கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், பா.ஜ.க.வின் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மதகலவரத்தால் எண்ணற்ற உயிர், உடமை இழப்புகளுக்கு ஆளான மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 6,000 கி.மீ. தூர இந்திய …

Read More »

தமிழகத்தில் 6,18,90,348 வாக்காளர்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,18,90,348 வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர், என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024, ஜன.1-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், …

Read More »

டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் பணி தேர்வு: உடனடியாக கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …

Read More »

2024 மக்களவை தேர்தல் | தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உட்பட 4 குழுக்களை அமைத்தது அதிமுக

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது அதிமுக. இது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்த நிலையில் தற்போது அதிமுகவும் குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது. விளம்பரத்துக்கென்றே ஒரு …

Read More »

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு – தமிழகத்துக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழகம் மேலும் 2 தங்கப் பதக்கம் வென்றது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 3வது நாளான நேற்று மகளிருக்கான பாரம்பரிய யோகா போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை எஸ்.ஹெச்.நவ்யா 64.75 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மேற்கு வங்க வீராங்கனையான ஆரண்ய ஹுதைட் 64.42 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த ரிது மொண்டல் 63.5 புள்ளிகளுடன் …

Read More »

அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா | தமிழகத்தில் 90 லட்சம் அழைப்பிதழ், அட்சதை விநியோகம்: தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தகவல்

சென்னை: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று (ஜன.22) நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, …

Read More »

நாடாளுமன்ற தேர்தலில் தலித்களுக்கு 2 தொகுதி; முன்னாள் எம்பி விஸ்வநாதன் வலியுறுத்தல்

சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான 35 பேர் கொண்ட தேர்தல் குழுவுடனான ஆலோசனை கூட்டம் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் முன்னிலை வகித்தார். மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் மற்றும் எம்பிக்கள் ஜெயக்குமார், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், முன்னாள் எம்பி விஸ்வநாதன், நாசே …

Read More »

ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதிப்பதா? – அண்ணாமலை கண்டனம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியதாவது: ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப கோயில்களுக்குள் எல்இடி திரைகள் வைக்கிறோம். அதற்கு கட்டணமும் வசூலித்துக் கொள்ளட்டும். ஆனால், அதைக்கூட தமிழக அரசு ஏன் தடுக்கிறது. இந்த நிகழ்வை கோயிலில் அமர்ந்து பக்தர்கள் கண்டு களிப்பதற்கும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திமுக அரசு சிறுபான்மை அரசியல் செய்கிறது. …

Read More »