சென்னை: 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது அதிமுக. இது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்த நிலையில் தற்போது அதிமுகவும் குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது. விளம்பரத்துக்கென்றே ஒரு குழுவை அமைத்து கவனம் ஈர்த்துள்ளது.
அந்த அறிக்கையில், “மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
1)தொகுதிப் பங்கீட்டுக் குழு : அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
1. கே.பி. முனுசாமி,கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
2. திண்டுக்கல் எஸ். சீனிவாசன், கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
3. பி. தங்கமணி, கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
4. எஸ்.எஸ்.வேலுமணி, கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
5. பா. பென்ஜமின் கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
2) தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
1. நத்தம் இரா. விசுவநாதன், கழக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
2. சி.பொன்னையன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்
3. முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
4. டி. ஜெயக்குமார் கழக அமைப்புச் செயலாளர் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
5. சி.வி.சண்முகம், கழக அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
6. செ.செம்மலை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
7. பா.வளர்மதி கழக மகளிர் அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்
8. ஓ.எஸ்.மணியன், கழக அமைப்புச் செயலாளர் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
9. ஆர்.பி.உதயகுமார், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
10. முனைவர் வைகைச்செல்வன் கழக இலக்கிய அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
3) தேர்தல் பிரச்சாரக் குழு
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
1. டாக்டர் மு. தம்பிதுரை, கழக கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர்
2. கே.ஏ.செங்கோட்டையன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
3. என்.தளவாய்சுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
4. செல்லூர் ராஜூ, கழக அமைப்புச் செயலாளர் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
5. ப.தனபால், கழக அமைப்புச் செயலாளர் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர்
6. க.சே.அன்பழகன், கழக அமைப்புச் செயலாளர் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
7. சு.காமராஜ், கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
8. எஸ்.கோகுல இந்திரா கழக அமைப்புச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்
9. உடுமலை மு. ராதாகிருஷ்ணன், கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
10. சிவபதி கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
4) தேர்தல் விளம்பரக் குழு
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
1. டாக்டர் சி.விஜயபாஸ்கர், கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
2. கடம்பூர் ராஜூ, கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
3. ராஜேந்திரபாலாஜி கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
4. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
5. டாக்டர் பி. வேணுகோபால், கழக மருத்துவ அணிச் செயலாளர்
6. டாக்டர் விபிபி பரமசிவம், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
7. இன்பதுரை, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
8. அப்துல் ரஹீம் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
9. ராஜ் சத்யன் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்
10. ஏ.ஆ. ராஜலெட்சுமி கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.