Breaking News
Home / செய்திகள் / சென்னை பஸ் செயலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்! பேருந்துக்காக இனி காத்திருக்க வேண்டாம்!

சென்னை பஸ் செயலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்! பேருந்துக்காக இனி காத்திருக்க வேண்டாம்!

சென்னை: தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் வைத்து Chennai Bus செயலி – IOS version (Apple mobile)ல் தெரியும்படி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செயலியை துவங்கி வைத்தார்.

சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது எத்தனை மணிக்கு நீங்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்புக்கு அந்த பேருந்து வந்து சேரும் என்ற விவரத்தை ஸ்மார்ட் போன் மூலம் மட்டுமே அறிந்துகொள்ளும் வசதி இருந்த நிலையில் இனி சுலபமாக உங்கள் IOS version ஆப்பிள் மொபைல் போனிலும் தெரிந்துக் கொள்ளலாம்.

பேருந்துகளில் பயணிப்போர் நலன் கருதி இந்த சென்னை பஸ் என்ற செயலியானது போக்குவரத்துத் துறை சார்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் நகரப் பேருந்துகளின் எண்கள் மூலம் அது எந்த இடத்தில் தற்போது வந்து கொண்டிருக்கிறது நீங்கள் நிற்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர இன்னும் எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ளலாம். அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி வாகனம் இருப்பிடம் (Automatic Vehicle Location) பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் (Location) பொதுமக்களின் கைபேசியில் தெரியும்படி “CHENNAI BUS” (APPS) செயலி, கடந்த 04.05.2022 அன்று முதல் Android mobile தெரியும் வகையில் செயலி துவங்கப்பட்டது. Chennai Bus செயலி IOS version (Apple mobile) தெரியும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு இணங்க, இன்று (22.02.2024) முதல் செயலியை IOS version (Apple mobile) தெரியும் வகையில் செயலி துவங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் “CHENNAI BUS” (APPS) செயலி வாயிலாக பின்வரும் விவரங்களை தெரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. 1. நகரத்திற்கு புதிதாக வரும் மக்கள் தங்கள் இருப்பிடம் (LOCATION) அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்ததிற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்து விவரம் நேரப்படி அறிந்து கொள்ளவும், 2. மேலும் இந்த செயலி மூலம் தங்களது பயண திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள ஏதுவாகவும்,

மேலும் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே ஒரு பொத்தான் (SOS) அழுத்தி தெரிவித்துக் கொள்ளும் வகையில் இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி,இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன், மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *