மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி விளையாடி வருகிறது.
முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் நேற்று முன்தினம் 2-வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
முதலில் விளையாடிய இந்திய அணி 16.2 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிக அளவாக ரோட்ரிக்ஸ் 30 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து தரப்பில் சார்லோட் டீன், லாரன் பெல், எக்கிள்ஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். நாட் ஷிவர் பிரன்ட், பிரேயா கெம்ப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 11.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அலைஸ் கேப்சி 25, நாட் ஷிவர் பிரன்ட் 16 ரன்கள் சேர்த்தனர்.