Breaking News
Home / பொழுதுபோக்கு / 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 8 ரன்கள் முன்னிலை; இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் வங்கதேசம்!

2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 8 ரன்கள் முன்னிலை; இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் வங்கதேசம்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 6) இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

கிளன் பிளிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதனையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்தது. வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

வங்கதேசம் நியூசிலாந்தைக் காட்டிலும் 117 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து வீரர் கிளன் பிளிப்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 72 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து வங்கதேசத்தைக் காட்டிலும் 8 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தைத் தொடர்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

About Admin

Check Also

ரஞ்சி அரையிறுதி: 17 ரன்னுக்கு 4 விக்கெட் காலி; மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு தடுமாற்றம்!

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *