சென்னை : இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்த நிலையில், சொந்த ஊருக்குச் சென்றிருக்கும் பலரும் ஊர் திரும்பி வருகின்றனர்.
தமிழக அரசு, தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
சொந்த ஊருக்குச் சென்று திரும்புபவர்கள் சென்னை மொத்த காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளதையடுத்து, சென்னை திரும்பும் போதே காய்கறிகளுடன் திரும்ப திட்டமிட்டு வருகின்றனர்.
இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லறை காய்கறி , பூ , பழக்கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை வழக்கம் போல மார்க்கெட் இயங்கும். இந்நிலையில், நாளை சென்னையிலும், சுற்றுப்புறங்களிலும் சில்லறை காய்கறி கடைகளில் காய்கறிகளின் விலை உயர்ந்து விற்பனைச் செய்யப்படும் என்கிற பயத்தில், பலரும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் போது காய்கறிகளுடன் திரும்புகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி, திருச்சி போன்ற ஊர்களில் சென்னை திரும்பும் பேருந்துகளில் பலரும் காய்கறிகளுடன் திரும்புவதைக் காண முடிந்தது.