சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக 1,077 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.