Breaking News
Home / தொழில்நுட்பம் (page 2)

தொழில்நுட்பம்

2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி!

2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும் என சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்க நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் கூறியதாவது, ‘ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்று ஊரக பள்ளி …

Read More »

பிப்.17ல் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளுடன் பாய்கிறது ராக்கெட். 2,275 கிலோ எடை உள்ள செயற்கைகோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 ஆய்வுக் கருவிகள் உள்ளன. புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தகவல்களை துல்லியமாக வழங்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

‘குரூப் எம்’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வணிக வீதி’ தொழில் முனைவோருக்கான களம் – ‘ஸ்டார்ட்அப் யுகத்தை புரிந்துகொள்ளல்’ வழிகாட்டு நிகழ்வு

சென்னை: தற்போதைய ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது குறித்தும் நடத்திவரும் தொழிலை மேம்படுத்துவது குறித்தும் மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வணிக வீதி தொழில்முனைவோருக்கான களம்’ எனும் வழிகாட்டி நிகழ்வு, நாளை (பிப்.10, சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள சவேரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஃபேம் டிஎன், டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் (FaMe TN, …

Read More »

ஸ்பெயின் பயணம் நிறைவு – நாளை சென்னை திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டார். முதலமைச்சருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் சென்றிருந்தார். ஆகையால், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக …

Read More »

அசத்திட்டீங்க Lenovo.. ரூ.9000 விலையில் இப்படியொரு Tablet-ஆ.! தூள்பறக்கும் விற்பனையில்.. என்ன மாடல்?

லெனோவா (Lenovo) சுற்றுசூழலில் உருவான எரேஸர் (Eraser) என்ற புதிய பிராண்ட், இப்போது அதன் 2வது டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை எரேஸர் A10 பேட் (Eraser A10 Pad) என்ற பெயருடன் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. தெரியாதவர்களுக்கு, இந்த மாத தொடக்கத்தில் லெனோவா (Lenovo) அமைப்பின் கீழ் எரேஸர் என்ற பிராண்ட் அறிமுகமானது. இந்த அறிமுகத்தை நிறுவனம் அதன் புதிய எரேஸர் K30 பேட் …

Read More »

தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது ஸ்பெயினின் ‘ரோக்கா’ நிறுவனம்: 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்

சென்னை: ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அந்நாட்டின், ஆக்சியானா நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் காட்டியிருக்கிறது. அதேபோல், ரூ.400 கோடி ரூபாய் முதலீட்டில் ரோக்கா நிறுவனம் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்திருப்பதாக தகவல் …

Read More »

ஸ்பெயினில் ஐரோப்பிய முதலீட்டாளர்களுடன் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள்

சென்னை: வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக ஏற்கெனவே தமிழகத்தில் முதலீடு …

Read More »

இந்திய சந்தையில் ரியல்மி 12 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 12 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 12 புரோ+ 5ஜி போனும் அறிமுகமாகி உள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை …

Read More »

ஸ்பெயின் சென்றார் முதல்வர் ஸ்டாலின்: டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச் உடன் சந்திப்பு

சென்னை: டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். நேற்று அவரை சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். அதன்படி ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை …

Read More »

பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட அனைத்து கருவிகளும் இயங்கின: பிஎஸ்-4 இயந்திரத்தில் ‘போயம்’ சோதனை வெற்றி

சென்னை: பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட்டின் பிஎஸ்-4 இயந்திரத்தில் அனுப்பப்பட்டிருந்த கருவிகள் திட்டமிட்டபடி ஆய்வு பணிகளை மேற்கொள்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து …

Read More »