Breaking News
Home / தகவல்கள் (page 6)

தகவல்கள்

இடைநிலை ஆசிரியர் பணிக்கு டிஆர்பி தேர்வு.. விண்ணப்பம் முதல் தேர்வு வரை முழு விபரம்

சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை தொடர்ந்து, தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரும் 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒருகட்டமாக, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் …

Read More »

ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கோயம்பேட்டில் பயணிகளை இறக்கி, ஏற்ற அனுமதி: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு …

Read More »

பள்ளிகளை சுற்றி போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்க மாணவர்களை கொண்டு போக்குவரத்து போலீஸார் புது திட்டம்

சென்னை: பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குப் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்கும் …

Read More »

பிப்.17ல் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளுடன் பாய்கிறது ராக்கெட். 2,275 கிலோ எடை உள்ள செயற்கைகோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 ஆய்வுக் கருவிகள் உள்ளன. புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தகவல்களை துல்லியமாக வழங்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது – தேர்வுத் துறை

சென்னை: பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன. அதன்படி பிளஸ்-1 தேர்வு மார்ச் 1-ம் தேதியும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதியும், 10-ம் வகுப்பு மார்ச் 26-ம் தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகின்றன. இந்நிலையில் …

Read More »

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பதற்றம் வேண்டாம் புரளி என காவல்துறை விளக்கம்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிகளில் குவிந்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு அப்பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து …

Read More »

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் உருமாற்றம் : மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தல்!!

சென்னை : தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓர் ஆண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இல்லை என்று பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். …

Read More »

2400 கோடி ரூபாய். 14 ஆயிரம் வீடுகள்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.!

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, யானை கவுனி பகுதியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன. இந்த குடியிருப்புகளை இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 1970ஆம் ஆண்டு தமிழக் அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. …

Read More »

நெருங்கும் மக்களவை தேர்தல்.. சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்!

சென்னை: சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் …

Read More »

அரசுப் பள்ளிகளுக்கு இருக்கை கொள்முதல் ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 372 அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட 1,881 கூடுதல்வகுப்பறைகளுக்கு 18,810 மேஜையுடன் கூடிய இருக்கைகள், டான்சி நிறுவனத்தின் மூலம் கொள்முதல்செய்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, டான்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட தளவாடப் பொருட்களை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றுபொருட்கள் அனைத்தும் தரத்துடனும், உரிய எண்ணிக்கையிலும் …

Read More »