Breaking News
Home / தகவல்கள் (page 12)

தகவல்கள்

“இணைப்பு வசதியின்றி திணறும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும்” – அன்புமணி

சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான். கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் …

Read More »

“அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல்” – ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார். 1992இல் அறிமுகமானதிலிருந்து 30 ஆண்டுகளாக ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கிறார் ரஹ்மான். கடைசியாக 2003ஆம் ஆண்டில் …

Read More »

சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வு: 472 வழக்கறிஞர்கள் தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வெழுத மொத்தம்12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது. இவற்றில் 2,544 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.அவர்களுக்கான முதன்மைத் தேர்வு நவ. 4, 5-ம் தேதிகளில்நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. …

Read More »

என்னை சந்திக்கும்போது பூங்கொத்துக்குப் பதில் கருத்தாழமிக்க புத்தகம் வழங்குங்கள்: அதிமுகவினருக்கு பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: என்னை சந்திக்கும்போது பூங்கொத்துக்குப் பதில் கருத்தாழமிக்க புத்தகங்களை வழங்கவேண்டும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும், அதனையடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதிமுக மகத்தான வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், என்னை நேரில் சந்திக்க வரும்போதும், கட்சி நிகழ்ச்சிகளில் நான் …

Read More »

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன? – அன்புமணி கேள்வி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்தொடர்பான விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2 மாதங் களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டி ருந்தோமோ அது நடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து கடனாளியான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன், …

Read More »

கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு… மீண்டும் தொடங்குகிறதா கோவிட்!

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. உலக நாடுகளில்JN.1மற்றும் HV.1 போன்ற கோவிட் திரிபுகள் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு …

Read More »

அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டம்..!!

சென்னை: அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசானது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜன.7, 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது. 2 நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளன. தொழில் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் …

Read More »

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஜன. 8, 9-ல் ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில் வரும் ஜன. 8, 9-ம்தேதிகளில், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், …

Read More »

தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் நேரடி நியமனம்

சென்னை: தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் …

Read More »

அரிசி ஆலை மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை

சென்னை: அரிசி ஆலைகளுக்கான மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்என்று அரிசி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு மற்றும் நெல், அரிசி டீலர் சங்க செயலாளர் ஏ.சி.மோகன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு மோட்டா ரக நெல் விலை 100 கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 40 என நிர்ணயிக்கப்பட்டது. இதை மத்திய அரசுகடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 183 …

Read More »