Breaking News
Home / தகவல்கள் (page 11)

தகவல்கள்

தமிழகத்தில் இத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வரப்போகுதா? டாப் 10 நிறுவனங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிக அளவு முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதற்காகவும் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், …

Read More »

மகேந்திரா நிறுவனத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் விரைவில் அறிமுகம் – ஆனந்த் மகேந்திரா

சென்னை: ‘சிறந்த முதலீட்டுக்கான இடம் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ஆனந்த் மகேந்திரா பேசியதாவது: தமிழகத்தில் கல்வி மேம்பட்டு இருப்பதால், பணியாளர்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி முனையத்தை சென்னையில் நிறுவுவதில் நான் ஆர்வம் காட்டினேன். தற்போது அது மகேந்திரா நிறுவனத்தின் பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. ஒரு காலத்தில் மகேந்திரா நிறுவனம், டீசல் வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் என்று மக்கள் …

Read More »

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சட்டப்பேரவைத் தேர்தலின்போது, போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த நிலையில் எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை …

Read More »

கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி முடிய தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் சராசரியாக …

Read More »

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் 1 மாநிலமாக வெற்றி நடைபோட உழைத்திடுவோம் – உதயநிதி

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மகப்பேறியல் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மகப்பேறியல் சார்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு …

Read More »

ஆன்லைன் சூதாட்டம் | ”உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை தமிழக அரசு உடனே விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்”: அன்புமணி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரின் சமூக வலைதள பதிவில், “சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால், தமது 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் …

Read More »

சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை: சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான வல்லுநர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், டிஆர்டிஓ முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர் மற்றும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஆகியோர் உரையாடினர். அப்போது, கேள்விகளுக்கு பதிலளித்து சோம்நாத் கூறியதாவது: சந்திராயன் 3 என்பது மக்களின் மனங்களுடன் தொடர்புடையது. …

Read More »

பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. …

Read More »

தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ஓய்வூதியர்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க முதல்வர் …

Read More »

ஜனவரி 21-ல் சேலத்தில் இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிறு) அன்று நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், “ ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், பெத்த …

Read More »