Breaking News
Home / தகவல்கள் (page 16)

தகவல்கள்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் | லெவோன் அரோனியனுடன் குகேஷ் இன்று மோதல்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று (15-ம் தேதி) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், பி.ஹரிகிருஷ்ணா, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஹங்கேரியின் சனான் சுகிரோவ், உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோர் கலந்து …

Read More »

தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம் விலை!

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்து, ₹46,000-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ₹5750-க்கும் …

Read More »

சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்டுமானப் பணிக்கு விரைவில் ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.432 கோடி செலவில் 27 மாடி கட்டிடம் கட்ட ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர் மெட்ரோ ரயில், புறநகர் மற்றும் நெடுந்தொலைவு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இடையே மக்கள் எளிதாகச் சென்றுவரும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஆண்டுமார்ச் மாதம் திறக்கப்பட்டது. இது, சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இங்கு லட்சக்கணக்கான …

Read More »

2 மாவட்டங்களில் நாளை யுஜிசி நெட் மறுதேர்வு!

சென்னை, நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் யுஜிசி நெட் மறுதேர்வு நாளை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவோருக்கான படிப்புகளுக்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்பட்டு …

Read More »

டிசம்பர் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி வரும் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட்-ராபின் சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியில் விளையாடுவார்கள். இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் சராசரி எலோ …

Read More »

சென்னையில் வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பெருமழை மழை பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப …

Read More »

மிக்ஜாம் புயல் பாதிப்பு | ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். “மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிச.5-ம் …

Read More »

ரெட்மி 13C 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 13C 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த …

Read More »

புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்

சென்னை: புறநகர் மின் ரயில் சேவையில் சென்னை – தாம்பரம் வழித் தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒருரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழை நீரில் மூழ்கியது. மழைநீர் தேங்கிய பகுதியில் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை நேற்று பிற்பகலில் இருந்து இயங்கத் தொடங்கியது. சென்னை எழும்பூர் – …

Read More »

புயல் மீட்பு, நிவாரணத்துக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மீட்டி நிவாரணப் பணிகளுக்கு எ.வ.வேலு, முத்துசாமி,மூர்த்தி உட்பட 7 அமைச்சர்களை கூடுதலாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தொடர்ந்து …

Read More »