சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மீட்டி நிவாரணப் பணிகளுக்கு எ.வ.வேலு, முத்துசாமி,மூர்த்தி உட்பட 7 அமைச்சர்களை கூடுதலாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள்,வங்கிகள். நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும், இன்றும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடி நிவாரணம் வழங்கி வருகின்றனர். சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்துக்கும். ஒரு ஐஎஸ் அதிகாரி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டு, களப்பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் புயல் பாதித்த பகுதிகளில் களப்பணியில் உள்ளனர். மேலும், அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலிருந்து நிலைமையைக் கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையரக கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி வருகிறார். நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் கசிவுகள், மின் கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் மின்சாரம் தொடர்பான விபத்துகளைத் தவிர்க்க, களத்திலேயே இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மின்வாரிய பணியாளர்கள்: சென்னையில் மட்டும் 600 மின்வாரிய பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்துக்கு 1317 பேர். செங்கல்பட்டுக்கு 2194 பேர், காஞ்சிபுரத்துக்கு 650 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் 3,831 பேர் என 8 மாவட்டங்களில் 8592 பணியாளர்கள் பணியில் உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க, 350 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4320 மருத்துவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூய்மைப் பணிகளுக்காக பிற மாவட்டங்களில் இருந்து 1000 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு. பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும். முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும். கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும். மேலும் 7 அமைச்சர்களை நியமித்துள்ளேன்.
அதன்படி, அமைச்சர் சு.முத்துசாமி காஞ்சிபுரத்துக்கும். தாம்பரம் மாநகராட்சிக்கு அமைச்சர் அர.சக்கரபாணியும், ஆவடி மாநகராட்சிக்கு அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வமும், கத்திவாக்கம். மணலி, மாத்தூர், சின்ன சேக்காடு, எண் ணூர் பகுதிகளுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கரும், வில்லிவாக்கம், அண்ணாநகர். அம்பத்தூர். கே.கே.நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளுக்கு அன்பில் மகேஷ் பொய்யா மொழியும். வேளச்சேரி. மடிப்பாக்கம் பகுதிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் சி.வெ.கணேசன் சோழிங்கநல்லூர், பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதி களுக்கும், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தியும் நேரடியாக சென்று நிவாரணம் மற்றும் சீர மைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். மேலும், வரலாறுகாணாத இந்த புயல் மற்றும் பெருமழை காரணமாக ஏற்பட் டுள்ள பொதுமக்களின் துயரைக் குறைக்கும் வகையில் தேவையான அனைத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்
தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு திட்டமிட்டு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக. தயார் நிலையில் இருந்த பல்வேறு அரசுத் துறைகளின் பணியாளர்கள் மற்றும் காவல் துறை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய செயல்பாடு காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும். பணியாளர்களுக்கு. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதற்கிடையே முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள். எம்எல்ஏக்கள் மற்றும் அலுவலர்கள் ஆகி யோரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.