Breaking News
Home / வேலை வாய்ப்பு (page 4)

வேலை வாய்ப்பு

ரூ.50000 வரை சம்பளம்.. 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்…பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை…

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதிக்குள்  (05/12/2023 ) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள் குறித்த விவரங்கள்:   பதவிசம்பளம்காலியிடங்கள் எண்ணிக்கைஇன சுழற்சிஆள்சேர்க்கை அறிவிக்கைஇரவு காவலர் பணி – தருமபுரி பிளாக் பஞ்சாயத்துரூ. 15700 – 50000/- மற்றும் இதர படிகள்1பொதுப் போட்டி (General Turn)இரவு காவலர் …

Read More »

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கான எழுத்து தேர்வு: சென்னை உட்பட 10 இடங்களில் நடந்தது

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் …

Read More »

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யாதோரும் கூட்டுறவுத்துறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

சென்னை: கூட்டுறவுத்துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 32 தேர்வர்களுக்கு சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணியாணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டுறவுத்துறையில் ஏற்கெனவே 38 மாவட்டங்களில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 5,500 காலிப்பணியிடங்களை நிரப்ப 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்முகத் …

Read More »

பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் 2,582 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி போட்டித் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வரும் 30-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயர்த்தி டிஆர்பி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் …

Read More »

நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பிடுக: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது”, என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் …

Read More »

ரயில்வே காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்..!!

சென்னை: தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வரும் நிலையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ரயிலில் வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, கஞ்சா, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் …

Read More »

போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணையவழியில் நுழைவு அனுமதிச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஓட்டுநர்-நடத்துநர் பதவிக்குஇணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களுக்கும் நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் www.arasubus.tn.gov.in என்ற …

Read More »

கூட்டுறவு துறையில் 2257 பணியிடம்! நேரடி விண்ணப்பம் ஏன்? டவுட் வருதே.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கின்ற நிலையில், அவர்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல், எதற்காக கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கு நேரடி விண்ணப்பம் கோரப்படுகிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் என மொத்தம் 2,257 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் …

Read More »

காலியாக உள்ள முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 128முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், மருத்துவ காலி இடங்களை நிரப்ப காலஅவகாசம் கோரி எழுதிய கடிதத்துக்கு சாதகமான பதிலை அளித்தீர்கள். அதனால், மாநிலத்தில் காலியாக உள்ள விலைமதிப்பற்ற எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், …

Read More »

குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: “குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள், 80 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்” என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 மற்றும் 2அ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் …

Read More »