தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதிக்குள் (05/12/2023 ) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் குறித்த விவரங்கள்:
பதவி | சம்பளம் | காலியிடங்கள் எண்ணிக்கை | இன சுழற்சி | ஆள்சேர்க்கை அறிவிக்கை |
---|---|---|---|---|
இரவு காவலர் பணி – தருமபுரி பிளாக் பஞ்சாயத்து | ரூ. 15700 – 50000/- மற்றும் இதர படிகள் | 1 | பொதுப் போட்டி (General Turn) | இரவு காவலர் பணிக்கான அறிவிப்பு – தருமபுரி பிளாக் பஞ்சாயத்து |
அலுவலக உதவியாளர் அரூர் பிளாக் பஞ்சாயத்து | ரூ. 15700 – 50000/- மற்றும் இதர படிகள் | 2 | ||
பொதுப் போட்டி (General Turn)பட்டியல் இனத்தவர் (அருந்ததியினர் பிரிவினருக்கு முன்னுரிமை ) | அலுவலக உதவியாளருக்கான அறிவிப்பு- அரூர் பிளாக் பஞ்சாயத்து | | ஜீப் ஓட்டுனர் – அரூர் பிளாக் பஞ்சாயத்து | ரூ. 19500 – 62000/- மற்றும் இதர படிகள் | 1 | பொதுப் போட்டி (General Turn) | ஜீப் ஓட்டுனருக்கான அறிவிப்பு – அரூர் பிளாக் பஞ்சாயத்து |
அடிப்படைத் தகுதிகள்: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி தகுதி வாய்ந்த – அதிகாரியிடமிருந்து செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
நிபந்தனைகள்:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை dharmapuri.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 22.11.2023 முதல் 05.12.2023 மாலை 05.45 மணி வரை ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் காலதாமதமாக வரும் விண்ணப்பங்ள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.