Breaking News
Home / செய்திகள் (page 31)

செய்திகள்

திமுக நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாக ஆலோசனை: விவரங்களை கேட்டறிந்தார் ஸ்டாலின்

சென்னை: திமுகவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஸ்பெயினில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கட்சிப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், …

Read More »

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: கூடுதல் இடங்களை கோரும் மதிமுக, மார்க்சிஸ்ட்

சென்னை: திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு கடிதம் அளித்துள்ளன. இதுதவிர, பிப்.12-ம் தேதி விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று முன்தினம் திமுக தேர்தல் குழுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்து பேசினர். இந்நிலையில், நேற்று மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் …

Read More »

வாயுக்கசிவு ஏற்படுத்திய எண்ணூர் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை: ரூ.5.92 கோடி இழப்பீடு வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்படுத்திய கோரமண்டல் உரத் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5.92 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: எண்ணூர் கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை …

Read More »

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாடு

சென்னை: பாஜக அல்லாத பிற கட்சிகளை அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைத்தால் அதை வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் …

Read More »

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு கடினம்: தேர்வர்கள் கருத்து

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் இன்னும் பிறதுறை சார்ந்த பள்ளிகளில் 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான நேரடி நிய மன அறிவிப்பைஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தஆண்டு வெளியிட்டது. இந்த தேர்வில் பங்கேற்க மாநிலம் முழுவதும் 41,485 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்துபட்டதாரி …

Read More »

கழிவுகளை அகற்றும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: கழிவுகளை அகற்றும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஐஜி பிரமோத்குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்வாரிய கிடங்குகளில் இருக்கும் கழிவுகள், அமலாக்கப் பிரிவில் உள்ள உதவி செயற் பொறியாளர்களின் மேற்பார்வையிலேயே அகற்றப்பட வேண்டும். அதே நேரம், அனல் மின்நிலையம், கட்டுமான வட்டங்கள் உள்ளிட்டவற்றில் உள்ளகழிவுகளை அகற்றும்போது லஞ்ச …

Read More »

“புயல் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சனை” – திமுக எம்.பி.க்கள் வரும் 8 ஆம் தேதி கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளநிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர் வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது …

Read More »

ரேஷன் கடைக்கு வரும் மக்களை சிரமப்படுத்தக்கூடாது! இல்லைன்னு சொல்லாம பொருட்கள் தரணும்! அமைச்சர் ஆர்டர்

சென்னை: ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களை நியாய விலை கடை ஊழியர்கள் எவ்விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். மேலும், அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாலின், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எப்போது வந்து கேட்டாலும் இன்முகத்துடன் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது; ”நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து …

Read More »

தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கார்கே பிப்.13-ல் சென்னை வருகை: ஸ்டாலினை சந்திக்கிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிப்.13-ம்தேதி சென்னை வருகிறார். அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்கிறார். மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை முதன்மையாக கொண்டு ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இக்கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டணி …

Read More »

சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரம்; குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் குவாரி அதிபர்களின் ரூ.130.60 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உள்ளிட்ட34 இடங்களில் அமலாக்கத் துறைகடந்த 12-ம் தேதி சோதனை நடத்தியது. குறிப்பாக, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கரிகாலன், ஆடிட்டர் டி.சண்முகராஜ் ஆகியோரது …

Read More »