சென்னை: கழிவுகளை அகற்றும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஐஜி பிரமோத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்வாரிய கிடங்குகளில் இருக்கும் கழிவுகள், அமலாக்கப் பிரிவில் உள்ள உதவி செயற் பொறியாளர்களின் மேற்பார்வையிலேயே அகற்றப்பட வேண்டும். அதே நேரம், அனல் மின்நிலையம், கட்டுமான வட்டங்கள் உள்ளிட்டவற்றில் உள்ளகழிவுகளை அகற்றும்போது லஞ்ச ஒழிப்புபிரிவு உதவி செயற்பொறியாளர் பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறுகழிவுகள் அகற்றப்பட்ட பிறகும் லஞ்சஒழிப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அகற்றப்படும் கழிவுகள் முறையாக எடை பார்க்கப்பட்டு, அதுகுறித்த விவரம் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட வேண்டும்.
மேற்கூறிய அறிவுறுத்தல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்என மீண்டும் உத்தரவிடப்படுகிறது. கழிவுகள் மின்னணு ஏல முறையில்தான் அகற்றப்படுகிறதா அல்லது வேறு முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை மின்னஞ்சல் வாயிலாக பகிர்மானப் பிரிவுமற்றும் அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.