சென்னை: கரோனா ஆராய்ச்சிக்காக தேசிய சித்த மருத்துவ கல்வி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.50 லட்சத்தை முறைகேடு செய்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 12 வாரங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சித்த மருத்துவரான எஸ்.விஷ்வேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கரோனா தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள கடந்த 2020-ம் ஆண்டு ரூ.50 லட்சத்தை சென்னை தாம்பரத்தில் உள்ள …
Read More »உயர்த்தப்பட்ட வாகன வரியை உடனே திரும்ப பெற வேண்டும்- சசிகலா
சென்னை: திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட வாகன வரியை உடனே திரும்ப பெற வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து விதமான வாகனங்களுக்கும் வரியை திமுக தலைமையிலான அரசு உயர்த்தி இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அதாவது சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள், போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா …
Read More »விடுமுறை முடிந்ததால் சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்- போக்குவரத்து நெரிசல்
சென்னை: தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து தென் மாவட்டம் பகுதியிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை நோக்கி படை எடுப்பதால் ஜானகிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கார் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்தனர். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து நாளை மீண்டும் வேலை நாட்கள் என்பதால் தற்போது மீண்டும் சென்னை …
Read More »சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை
சென்னை: சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை. அலையில் சிக்கிய 2 பெரியவர்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
Read More »ஹை ஸ்பீடு அமைச்சர் உதயநிதி..கொட்டும் மழையிலும் அசராத உழைப்பு
சென்னை: முதல்நாள் கழகத் தொண்டர் ஒருவரின் இல்லத் திருமணவிழா. அடுத்த நாள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட புதிய பயனாளிகள் வங்கி அட்டை வழங்கும் விழா. அதற்கு அடுத்த நாள் தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் விழா. இப்படி தினம் ஒரு நிகழ்ச்சி அல்ல, பல நிகழ்ச்சி. அந்தளவுக்கு பிசியாக இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆகவேதான், ‘களப்பணியில் கவனமாகச் செயல்பட்டு வருகிறார் அமைச்சர் …
Read More »நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்
சென்னை: நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணம் என கேரள ஐ.பி.எஸ். அதிகாரி உன்னிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். பீர் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் 12, 13 பாட்டில் வரை கலாபவன் மணி பீர் குடித்து வந்துள்ளார். ஏற்கனவே நீரிழிவு நோயால்: பாதிக்கப்பட்டிருந்த கலாபவன் மணிக்கு கல்லீரல் …
Read More »சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை உச்சநேர கட்டணம் வசூலிக்கப்படாது: தமிழக அரசு
சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட உச்சநேர மின்கட்டணம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை வசூலிக்கப்படமாட்டாது என தமிழக அரசின்அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம், பீக் …
Read More »உச்சம் தொட்ட மதுரை, சென்னை – டாஸ்மாக் மது விற்பனை ரூ.467.69 கோடி @ தீபாவளி
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் இரண்டு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அதிகமாகியுள்ளது. இதன் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதன்படி, நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.467.69 கோடிக்கு மது …
Read More »இன்று விடுமுறை… வெறிச்சோடியது கோயம்பேடு மார்க்கெட்… சொந்த ஊர்களிலிருந்து காய்கறிகளுடன் திரும்பும் பொதுமக்கள்!
சென்னை : இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்த நிலையில், சொந்த ஊருக்குச் சென்றிருக்கும் பலரும் ஊர் திரும்பி வருகின்றனர். தமிழக அரசு, தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சொந்த ஊருக்குச் சென்று திரும்புபவர்கள் சென்னை மொத்த காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு …
Read More »ராணிப்பேட்டை பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசு வெடித்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
Read More »